Friday, June 24, 2011

போட்டோஷாப்-பாடம்-1 (blost effect) sun

 வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப் எனும் கடலில் எத்தனையோ வித்தைகள்.அதில் எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இன்று முதல் பாடம் சூரியனை போல ஒரு தோற்றத்தை உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.





1.  போட்டோஷாப்பில் ஏதாவது ஒரு அளவில் ஒரு பைல் திறந்து கொள்ளுங்கள். நான் 800*600  
அளவில் திறந்துள்ளேன்.அதை கருப்பு நிறத்தால் நிரப்பவும்.


2.Elliptical marquee tool கொண்டு ஒரு வட்டம் வரைந்து கொள்ளவும்.background சிகப்பு வண்ணத்தை தேர்வு
செய்து delet பட்டனை அழுத்தவும்.இப்பொழுது
வட்டம் சிகப்பு நிறமாக மாறி இருக்கும்.
3.இப்பொழுது Select-Modify-Contract சென்று வரும் விண்டோவில் 45pixels மதிப்பு கொடுத்து ok தரவும்.
இப்பொழுது சிகப்பு வட்டதிற்கு உள்ளே ஒரு வட்டம்
தோன்றியிருக்கும்.இப்பொழுது Background மஞ்சள் நிறத்தை தேர்வு செய்து delet பட்டனை அழுத்தவும்.இப்பொழுது சிகப்பு வட்டதிற்கு உள்ளே
ஓரு மஞ்சள் வட்டம் தோன்றியிருக்கும்.இனி மீண்டும் Select-modify-contract சென்று வரும் விண்டோவில் 45 pixels மதிப்பு கொடுத்து ok தரவும்.
மஞ்சள் வட்டத்திற்கு உள்ளே ஒருவட்டம் தோன்றியிருக்கும்.இனி background வெள்ளை நிறத்தை தேர்வு செய்து delet பட்டனை அழுத்தவும்.மஞ்சள் வட்டத்திற்கு உள்ளே  வெள்ளை   வட்டம் தோன்றியிருக்கும்.ctrl+d அழுத்தவும்.இப்பொழுது வெள்ளை வட்டத்தை சுற்றி இருந்த கோடு மறைந்து விடும்.                                                                                                        
4.இனி Filter-Brush stroke-Spatter சென்று வரும் விண்டோவில் spray radius-25, Smoothness-2 என்று மதிப்பு தந்து ok தரவும்.                                                                                    

5.கடைசியாக Filter-Blur-radial blur சென்று வரும்  
விண்டோவில் Amount-100, Blur method-Zoom, Quality-Good
என்று மதிப்பிட்டு ok தரவும்.முடிந்தது .நமக்கு தேவையான sun blost படம் ரெடி.
என்ன நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துங்கள்.வளர்கிறேன்.குறை இருந்தால் கூறுங்கள் திருத்தி கொள்கிறேன்.

                                                                     என்றும் நேசமுடன்
                                                                                  ஸ்ரீதர்                 
                                                                                                                                                                                                                                                                
நமது அடுத்த பதிவு Trippy Wave effect



15 comments:

  1. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இன்னும் நிறைய எதிர்பார்கிறேன். எனக்கு போட்டோஷாப் மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  2. நல்ல பதிவு நன்றி நண்பா

    ReplyDelete
  3. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி
    என்றும் நேசமுடன்
    ஸ்ரீதர்

    ReplyDelete
  4. அருமையான பதிவு நன்பரே. நன்றி.

    ReplyDelete
  5. அருமையாக விளக்கியுள்ளீர்கள்..!!

    ReplyDelete
  6. நன்றி (09)

    ReplyDelete
  7. நன்றி நண்பரே! நானும் செய்து பார்த்தேன். கலர் தான் கொஞ்சம் டார்க்காக வந்துவிட்டது.
    :) :) :)

    ReplyDelete
  8. முயர்சிக்கிறேன்

    ReplyDelete
  9. தங்கள் மீது இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாகட்டும் !
    அருமையான பதிவு . தொடர்ந்து எழுதுங்கள் .

    ReplyDelete
  10. kindly plse help. i need photoshop software. plse give the link. thanks.

    ReplyDelete
  11. cant see any image bro

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்