Thursday, June 23, 2011

போட்டோஷாப்-அறிமுகம்

 வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். 
என் இனிய தமிழ் நண்பர்களே!வணக்கம்! திரவியம் தேட திரைக்கடலுக்கு அப்பால் வந்துள்ள நான் உங்களுடன் பேசுகிறேன்.நாம் எழுதுவது(கவிதை,கட்டுரை)எதுவும் அணுக்களின் விகித மாற்றம் என்றும் இயற்கையாகவே வரவேண்டும் என்றும் கூறுவதுண்டு.எதுவாக இருந்தாலும் எனது பார்வையில் என் வலைப்பூ பிறந்தது அறிமுகமில்லா வலையுலக
நண்பர்களின் வலைத்தளங்களை பார்த்துதான்.வெட்டி விடும் போது தான்

யூகலிப்பட்டஸ் மரம் வளர்கிறது.நீங்கள் என் எழுத்துக்களை பத்து சதவிகிதம் படித்தால் கூட நூறு சதவிகிதம் விமர்சனங்களால் வெட்டி என்னை வளர விடுங்கள் .எனக்கு கணினி பற்றிய அடிப்படை அறிவு மட்டுமே இருந்த

போதிலும் நீண்ட நாட்களாக வலைப்பூ படிக்கும் பழக்கம் உள்ளது.எனக்கும் வலைப்பூ தொடங்க வேண்டும் என்ற ஆசை.என்ன எழுதுவது எதைப்பற்றி எழுதுவதுஎன்று குழப்பம்.சரி நமக்கு போட்டோஷாப் பற்றிகொஞ்சம் தெரியும்.அதைபற்றி எழுதலாம் என்று இந்த வலைபூவை தொடங்கி விட்டேன்.போட்டோஷாப் பற்றிய வலைபதிவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் திரு வேலன்அவர்களும்,திரு கான் அவர்களும்.இருவரும் போட்டோஷாப் அடிப்படை பாடங்களை வேண்டியமட்டும் கொடுத்து விட்டார்கள்.அதை பற்றி நான் எழுதினால் நிச்சயம் அவர்களை காப்பியடித்தது போலவே இருக்கும்.அதனால் நாம் வேறு ரூட்டில் போவோம்.பதிவு போடுவது என் பொறுப்பு.என்னை ஊக்கப்படுத்துவது உங்கள் பொறுப்பு.
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்
அடுத்த பதிவு சிவப்பு சூரியன் உருவாக்குவது எப்படி?



                                 


7 comments:

  1. வாழ்த்துக்கள் நன்பரே.

    ReplyDelete
  2. திரு அருண்வடிவேல் அவர்களே!தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!

    ReplyDelete
  3. தங்களின் வலைப்பூவின் அறிமுகம் இன்று தான் கிடைத்தது...தனக்கு தெரிந்த விசயத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் உங்கள் எண்ணத்திற்கு பாராட்டுக்கள்.பாடங்களை கற்க துவங்கி விடுகிறேன்..

    ReplyDelete
  4. தங்களின் அனைத்து பதிவுகளையும் படித்தாகி விட்டது அனைத்தும்
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    ReplyDelete
  5. தாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பரே... இதோ முதல் பதிவில் தொடங்கிவிட்டேன்... இனி போட்டோசாப்பை கற்றுக்கொண்டுவிடுவேன் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்கிறது....தொடக்கமே அழகான வார்த்தைகளால் நிரப்பி ஆரம்பித்திருக்கிறீர்கள்... நன்றி

    ReplyDelete
  6. பேசிக் போட்டோஷாப் கற்றுக்கொள்ளவேண்டும் ஸ்ரீதர்.. அப்படியே அக்கவுண்டன்சியும்... யாராவது தெரிந்தவர் இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்..

    போட்டோஷாப் பேசிக் லிங்க் கொடுத்தீங்கன்னா எனக்கு கற்க உதவியாகவும் இருக்கும்பா..

    அன்பு நன்றிகள்...

    ReplyDelete
  7. மிகத்தாமதமாக உஙகளைக் கண்டிருக்கிறேன். இருப்பினும் இப்போதாவது கண்டுகொண்டேனே என்பதில் மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்