Sunday, July 10, 2011

போட்டோஷாப் பாடம்-12 ICE TEXT

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் முக்கியமானதொரு அம்சம் TEXT EFFECT.போட்டோஷாப்பில் நூற்றுக்கணக்கில் நாம் விதம் விதமாக கண்ணைக்கவரும் பல அற்புதமான text effect களை உருவாக்கலாம்.அந்த வகையில் இன்று நாம் ice text உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
உங்களுக்கு விருப்பமான அளவில் ஒரு File திறந்து கொள்ளவும்.Background = White)
Image - Mode - சென்று Gray scale தேர்வு செய்து கொள்ளவும்.
                                                                         final stage







இப்பொழுது உங்களுக்கு தேவையான பெயரை text tool தேர்வு செய்து type செய்து கொள்ளவும்.
இப்பொழுது Filter-Noise-Add noise சென்று வரும் விண்டோவில் Amount=145, Gassian தேர்வு செய்யவும்.
இப்பொழுது Layer - Flatten Image  தேர்வு செய்யவும்.பிறகு Filter-Pixelate-Crystallise சென்று வரும் விண்டோவில் Cell Size=3 என மதிப்பிட்டு Ok தரவும்.

இப்பொழுது Filter > Stylise > Find Edges தேர்வு செய்யவும்.பிறகு Filter >Blur>Gaussian Blur சென்று வரும் விண்டோவில் Radius ன் மதிப்பு =0.7 என்று மதிப்பு தரவும்.
இனி Image >Rotate Canvas > 90CW தேர்வு செய்யவும்.பிறகு Image > Adjutsments > Invert தேர்வு செய்யவும். இப்பொழுது படம் கீழே இருப்பது போல் வந்திருக்கும். 
இனி Filter > Stylize > Wind சென்று வரும் விண்டோவில் Method=Wind, Direction=From the right என்று Ok செய்யவும்.(இதை இரண்டு முறை செய்யவும்)



 இனி Image > Rotate Canvas > 90 CCW தேர்வு செய்யவும்.


இப்பொழுது Image > Mode சென்று RGB Color ஆக மாற்றிகொள்ளுங்கள்.


கடைசியாக Image > Adjustment > Hue/Saturation சென்று கீழே இருப்பது போல் மதிப்பிட்டு Ok செய்யுங்கள்.
நமக்குதேவையான ice text effect தயார்.
      இதை போல நீங்களும் உங்களுக்குப் பிடித்தது போல் வடிவமைத்துக் கொள்ளுங்கள்.                                   
                         
 என்ன நண்பர்களே! பதிவு பிடித்திருக்கிறதா? சென்ற பதிவுக்கு யாரும் கருத்துக்கூறவில்லை. பதிவு பிடிக்கவில்லையா?அல்லது புரியவில்லையா? நான் முன்பே கூறியது போல் உங்கள் கருத்துக்கள் மட்டுமே  எனது அடுத்தடுத்த பதிவுகளுக்கு தூண்டுகோல்.எனவே சிரமம் பார்க்காமல் கருத்துரையிட மறக்காதீர்கள்.
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்

7 comments:

  1. சூப்பரா இருக்கு சார்..,
    வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  2. திரு.சாய்தாசன் மற்றும் அருண்வெற்றிவேல்,என்னை முதன் முதல் ஊக்கப்படுத்தியவர்கள் நீங்கள்.அதே போல் இறுதி வரை உங்கள் ஆதரவை நாடும் நண்பன் ஸ்ரீதர்

    ReplyDelete
  3. புதிய TEXT EFFECT கற்று கொண்டேன். நன்றி (09)

    ReplyDelete
  4. நான் தற்போதுதான் உங்கள் பதிவை பார்க்கிறேன். மிகவும் வித்தியாசமாக உள்ளது.போட்டோசாப்பை இன்னொரு பரிமாணத்தில் தருவதற்கு நன்றி.

    ReplyDelete
  5. நன்றி முருகன்!தவறாமல் வந்து கருத்தை தாருங்கள்.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்