Wednesday, July 13, 2011

போட்டோஷாப் பாடம்-15 STAR BURST

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் இன்று மிக எளிமையான முறையில் STAR BURST EFFECT உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.இந்த Effect ஐ நம் படங்களுக்கு Background ஆக வைக்கும் போது பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.



500*500 அளவில் Background Transparent ஆக இருக்குமாறு புதிய File ஒன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள்.Rectangular Marquee Tool தேர்வு செய்து Shift Keyஐ அழுத்திக்கொண்டு கீழே படத்தில் உள்ளது போல் கட்டம் போடவும்.(கட்டம் சமமாக வரவில்லை என்றால் Ruler உபயோகித்துக்கொள்ளுங்கள்.View > Rulers )

உங்களுக்கு விருப்பமான வண்ணத்தை தேர்வு செய்து PaintBucket Tool மூலம் முதல் கட்டத்தில் Click செய்யுங்கள்.இப்பொழுது படம் இதுபோல் வந்திருக்கும்.

 இப்பொழுது Select > Inverse  Click செய்யவும்.இனி உங்களுக்கு விருப்பமான இரண்டாவது கலரை தேர்வு செய்து Paint Bucket டூலை இரண்டாவது கட்டத்தில் வைத்து Click செய்யவும்.இப்பொழுது உங்கள் படம் இது போல வந்திருக்கும்.


இப்பொழுது Ctrl+d அழுத்துங்கள்.படத்தை சுற்றி இருந்த புள்ளி மறைந்திருக்கும்.
இனி Filter > Distort >PolarCoordinates சென்று வரும் விண்டோவில் Rectangular to polar தேர்வு செய்யவும்.


இப்பொழுது Filter > Artistic > Plastic Warp சென்று வரும் விண்டோவில் கீழே காண்பது போல் மதிப்பு கொடுங்கள்.








இப்பொழுது நமக்கு தேவையான Effect தயார்.இதில் தேவையான படத்தை இணைத்து விடுங்கள்.



இந்த படம் கருப்பு&வெள்ளை கலரில் செய்து Hue/Saturation மூலமாக கலர் மாற்றியது.

நண்பர்களே!இந்த பாடத்தை இதை விட எளிமையாக யாரும் கூற முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.உங்கள் கருத்து என்ன என்பதை கூறவும்.
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்

5 comments:

  1. எளிமையான விளக்கம்..!!

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. சூப்பரோ சூப்பருங்னா...நண்றி, வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  4. Thank you for your good one of the supper blog

    ReplyDelete
  5. கலக்கல் பதிவு சார்,நன்றி...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்