Thursday, July 14, 2011

போட்டோஷாப்-பாடம்-16 பளிச்சிடும் பற்களுக்கு

 வணக்கம் நண்பர்களே!
 சில tooth paste விளம்பரங்களில் வரும் விளம்பர மாடல்களின் பற்களை பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.போட்டோஷாப் நம்மிடம் இருக்கும் போது நாமும் நமது புகைப்படங்களில் நமது பற்களை நாமே பார்த்து ஆச்சரியப்படும் வகையில் வெண்மையாக மாற்றிக்கொள்ள முடியும்.எனக்குத் தெரிந்து பற்களை வெண்மையாக்க போட்டோஷாப்பில் கிட்டத்தட்ட 15 வழிகளுக்கு மேல் உள்ளது.எனக்கு தெரியாமல் எத்தனையோ இருக்கலாம்.எனக்கு தெரிந்ததிலேயே மிக மிக எளிதாக பற்களை வெண்மையாக்கும் பாடத்தை இங்கு தந்திருக்கிறேன்.


உங்களுக்கு தேவையான படத்தை போட்டோஷாப்பில் திறந்து கொளுங்கள்.ctrl+j Press செய்து Duplicate செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது படத்தை தேவையான அளவு Zoom செய்து கொண்டு Polygonal Lasso tool தேர்வு செய்து உதட்டை சுற்றி கோடு போடுங்கள்.
இப்பொழுது Image > Adjustment > Levels சென்று கீழே உள்ளது போல் செட்டிங் செய்யவும்.








மேலே உள்ளது போல் செட்டிங் செய்து Ok செய்தவுடன் உங்கள் படம் இது போல் வந்திருக்கும்.

இப்பொழுது உதட்டின் நிறமும் மாறி இருக்கும்.உங்களுக்கு இந்த உதட்டின் நிறம் பிடித்திருந்த்தால் அப்படியே விட்டு விடவும்.இல்லை பழைய உதடே வேண்டும் என்றால் Erase Tool தேர்வு செய்து பற்களில் படாமல் சரியாக உதட்டின் மேல் உள்ள கலரை மட்டும் அழித்து விடவும்.
இப்பொழுது பற்களின் மேல் தெரியும் இலேசான கறைகளை நீக்க வேண்டும்.அதற்கு Image > Adjustment > Hue/Saturation சென்று வரும் விண்டோவில் கீழ் கண்டவாறு செட் செய்யுங்கள்.


இப்பொழுது பற்கல் வெண்மையாக பளிச்சிடுவதை பார்க்கலாம்.இனி ஒரு சிறிய வேளை இருக்கிறது.
Dodge tool தேர்வு செய்து கீழ் கண்டது போல் செட் செய்து கொள்ளுங்கள்.

செட் செய்தவுடன் உதட்டுப்பகுதியில் இருட்டாக உள்ள இடத்தில் Dodge Toolஆல் தடவவும்.நமக்கு தேவையான படம் தயார்.






மற்றுமொறு படம்
 பற்களை பற்றிய இன்னும் பல பாடங்கள் உள்ளது.உடைந்த பற்களை சரி செய்வது,டிராகுலா பல்,கல்யாணராமன் பல்,இப்படி நிறைய உள்ளது.அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
என்ன நண்பர்களே!பதிவு எப்படி? தங்கள் கருத்துக்களை கூற மறவாதீர்கள்!
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்

9 comments:

  1. விளம்பரத்தில இப்டிதான் ஏமாத்தறாங்களா..?! நல்ல பதிவு..!! :)

    ReplyDelete
  2. Really useful... Gud lesson.Thankyou and following with more expectations...

    ReplyDelete
  3. வழக்கம் போல் இந்த பதிவும் தூள்...

    தொடருங்கள்...

    பாடம் 11 தலைப்பில் இரண்டு பாடம் இருக்கிறது, என்பதை உங்கள்கவனத்திற்கு ....

    -அன்புடன் பல்லவன்.

    ReplyDelete
  4. தளத்தை பார்வையிட்டு கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி!தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி பல்லவன்...

    ReplyDelete
  5. சூப்பரா இருக்கு நன்பா.,நான் இனிமேல் கோல்கேட் பல்பொடி வாங்கவேமாட்டேன்.

    ReplyDelete
  6. Very Nice and Very useful website i like so much. Thank you very much Mr.Sri...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்