Saturday, July 16, 2011

போட்டோஷாப்-பாடம்-18 மழை பெய்ய வைக்க

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் மழை பெய்யும் Effect உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.இந்த முறையில் நீங்கள் இந்த Effectஐ உருவாக்கும் போது மற்ற முறைகளை விட மிகவும் தத்ரூபமாக இருக்கும்.

தேவையான படத்தை திறந்து கொள்ளுங்கள்.புதிய லேயர் உருவாக்கி கொள்ளுங்கள்.
புதிய லேயரை கருப்பு நிறத்தால் நிரப்புங்கள்.இனி Filter > Noise > Add Noise சென்று வரும் விண்டோவில் கீழே இருப்பது போல் மதிப்பு கொடுங்கள்.
இப்பொழுது படம் இது போல் வந்திருக்கும்.இனி Filter > Blur > Motion Blur சென்று வரும் விண்டோவில் கீழே இருப்பது போல் மதிப்பு கொடுங்கள்.
படம் இதுபோல் வந்திருக்கும்.இப்பொழுது இதன் Blending Mode ஐ Screen,Overlay, Lighten இது மூன்றில் எது பொருத்தமாக இருக்கிறதோ அதை தேர்வு செய்யுங்கள்.இந்த படத்துக்கு நான் Screen தேர்வு செய்திருக்கிறேன்.
இப்போது Ctrl+L அழுத்தி வரும் விண்டோவில் கீழே உள்ளது போல் மதிப்பிடவும்.நான் சிகப்பு நிறத்தில் அடையாளம் செய்துள்ள இடத்தை மட்டும் உங்கள் படத்துக்கு ஏற்றார் போல கூட்டியோ,குறைத்தோ வைத்துக் கொள்ளவும்
தேவைப்பட்டால் Ctrl+U அழுத்தி saturationஐ  கலர் மாற்றம் செய்து கொள்ளுங்கள்.
கருத்து கூற மறக்காதீர்கள்.
என்றும் நேசமுடன் 
                                                         ஸ்ரீதர்                  

6 comments:

  1. அடடா மழைடா... அடைமழைடா... பாடல் ஞாபகத்துக்கு வருகிறது. :)

    ReplyDelete
  2. wow fantastic sridhar.keep it up

    ReplyDelete
  3. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!
    சாய்தாசன் இந்த வலைத்தளத்திற்கு இத்தனை வாசகர்கள் வருவதற்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம்.மிக்க நன்றி1

    ReplyDelete
  4. nall padhivu nandri
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  5. நல்ல கருத்து... பகிர்ந்தமைக்கு நன்றி..

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்