Sunday, July 17, 2011

போட்டோஷாப்-பாடம்-19 ஒரே நிமிடத்தில் BORDER போட

வணக்கம் நண்பர்களே!
நம் புகைபடங்களுக்கு அழகூட்டுவதில் பார்டர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.அப்படி பார்டர் போட ஏராளமான வழிமுறைகள் போட்டோஷாப்பில் உண்டு.அவை சற்று கடினமானவை.புதியவர்களுக்கும் சற்று சிரமம்.எந்தவித சிரமும் இன்றி ஒரே நிமிடத்தில் பார்டர் போடுவது எப்படி என்று பார்ப்போம்.



உங்களுக்கு தேவையான படத்தை போட்டோஷாப்பில் திறந்து கொள்ளவும்.
இப்பொழுது Image > Canvas Size செல்லுங்கள்.வரும் விண்டோவில் உங்கள் படத்தின் canvas size inches ல் இருக்கும்.(கீழே படத்தில் பார்க்கவும்)

inches ல் இருப்பதை pixel ஆக மாற்றவும்.இப்பொழுது உங்கள் canvas ன் அளவு pixel  ஆக வந்திருக்கும். உதாரணமாக என் படத்தை பாருங்கள்.என் படத்தின் canvas size 400 x 400.
 இப்பொழுது இருக்கும் அளவில் இருந்து 30 pixel அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் படம் எந்த அளவாக இருந்தாலும் சரி 30 pixel மட்டுமே அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.canvas extension என்று இருப்பதில் உங்களுக்கு பார்டர் எப்படி வேண்டுமோ அந்த கலரை வைத்துக்கொள்ளுங்கள்.நான் வெள்ளை கலர் வைத்துள்ளேன்.ok கொடுங்கள்.உங்கள் படத்துக்கு அழகான பார்டர் தயார்.





கருத்துக்களை கூற மறவாதீர்கள்.
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்

9 comments:

  1. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிக எளிமையாக விளக்கி சொல்லி தந்திரிக்கீரீர்கள் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. I have tried this one and it works gud... excellent and easy method... Thankyou and continue my learning from your site...

    ReplyDelete
  4. உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  5. மிக அருமையான முறை சார், அந்த வெள்ளை நிறத்தை எளிதாக மேஜிக் வாண்ட் டூல் மூலம் செலக்ட் செய்து கொண்டு ஒரு புதிய லேயர் உருவாக்கி அதில் நம் பார்டருக்கான அனைத்து எபெக்டுகளையும் மாற்ற முடியுமா என முயற்சித்தேன், முயற்சி வெற்றி, பகிர்வுக்கு நன்றி, இன்றுதான் தங்கள் வலைப்பூவுக்கு வந்தேன், எல்லாமே எளிமையான அருமையான பதிவுகள்... நன்றி...

    ReplyDelete
  6. போட்டோஷாப் பத்தி எதுவும் தெரியாத எனக்கு உங்கள் எழுத்துக்கள் வரப்ரசாதம். உங்களிடமிருந்து இன்னும் எதிபார்க்கிறேன். நன்றி. நலமே விளைக... வாழ்க வளமுடன்... கண்ணன், கோவை

    ReplyDelete
  7. ரொம்ப ரொம்ப அறுமை பதிவுகள் ஸ்ரீதர் அண்ணா...
    உங்க பதிவுக்கு நான் என்றும் கடமைப் பட்டிருக்கிறேன் அண்ணா.
    உங்க பணி தொடரட்டும் அண்ணா.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்