Monday, July 18, 2011

போட்டோஷாப் பாடம் 20 - OUT LINE BORDER

வணக்கம் நண்பர்களே!
இன்று போட்டோஷாப்பில் மிக மிக சுலபமாக எழுத்துக்களுக்கு out line border போடுவது எப்படி என்பதை பார்ப்போம்.இதில் சிறப்பு என்னவென்றால் இந்த ஒரே முறையில் option எதுவும் மாற்றாமல் இரண்டு மாடல்களை உருவாக்கலாம்.

1, out line border text   2, 3d text.

போட்டோஷாப்பில் உங்களுக்கு தேவையான பெயரை உங்களுக்கு விருப்பமான கலரில் Type செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது  Selection > Load Selection Click செயுங்கள்.இப்பொழுது வரும் விண்டோவில் எந்த மாற்றமும் செய்யாமல் Ok செயுங்கள்.
இப்பொழுது பெயரை சுற்றி புள்ளி புள்ளியாக கோடு வந்திருக்கும்.இப்பொழுது
 Select > Modify > Expand சென்று வரு விண்டோவில் Expand ன் மதிப்பு 6
கொடுங்கள்.(உங்களுக்கு பார்டர் மெலிதாக வேண்டும் என்றால் 6க்கு குறைவாகவும்,மொத்தமான பார்டர் வேண்டுமென்றால் 6 க்கு அதிகமாகவும் மதிப்பு கொடுத்து கொள்ளுங்கள்.)

இப்பொழுது பெயர் இது போல வந்திருக்கும்.இப்பொழுது புதிய லேயர் உருவாக்கி அதை உங்கள் text லேயருக்கு கீழே வைத்து விடுங்கள்.பார்க்க படம்.

இப்பொழுது உங்களுக்கு விருப்பமான கலரை foreground Color ஆக தேர்வு செய்து paint bucket tool ஆல் பெயரின் மீது click செய்யவும்.
FOREGROUND BLACK தேர்வு செய்த படம்














GRADIENT OVERLAY தேர்வு செய்த படம்
PATTERN தேர்வு செய்த படம்









இப்பொழுது இவற்றை 3D Text ஆக மாற்ற பெயரை     கீழேயோ,மேலேயோ,பக்கவாட்டிலோ லேசாக இழுத்து விடுங்கள்.











என்ன நண்பர்களே! பக்கம் பக்கமாக பதிவு போடும் எனக்கு பத்து வார்த்தைகளில் உங்கள் கருத்தை கூறுங்கள்.அடுத்த பதிவில் எழுத்துக்குள்ளே
 நாம் விரும்பிய கலரையோ,pattern யோ கொண்டு வருவது எப்படி என்று பார்ப்போம்.
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்

9 comments:

  1. One can recreate the same effect in gimp in future. of course after taking permission from you i will do that in my gimp blog.

    ReplyDelete
  2. அருமை.கத்துக்கொள்ள வைக்கிறீர்கள்

    ReplyDelete
  3. Tis post vr usefull 2 me my dear frnd. tnkx..

    ReplyDelete
  4. நமக்கு தெரிந்ததை மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்ற உங்களின் உழைப்புக்கு alexa rank-ல் சீக்கிரம் இடம்பெற வாழ்த்துகள்.
    பார்டர் போடுவதிலும் வித்தியாசமான பதிவு அருமை. நன்றி.

    ReplyDelete
  5. என் வலைபூவிற்கு வந்து கருத்து சொல்லி வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என்மனமார்ந்த நன்றி!நண்பர் சாய்தாசனுக்கு ஓர் வேண்டுகோள்.தங்கள் கருத்துக்களை தமிழிழ் பதிவு செய்யுங்கள்.காரணம் விமர்சனங்களை தாய் மொழியில் படிக்கும் போது என்னை மேலும் உற்சாகப்படுத்தும்.தவறாக சொல்லி இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.
    என்றும் நேசமுடன்
    ஸ்ரீதர்

    ReplyDelete
  6. எளிதான வழி. நன்றி -ர்ங்கா

    ReplyDelete
  7. எளிய விளக்கம். இதைப்பார்த்து நான் 6 அவுட்லைன் வரும் எழுட்த்தை உருவாக்கி உள்ளேன். உங்கள் பார்வைக்கு எப்படி அனுப்புவது?-நாதன்

    ReplyDelete
  8. Anonymous said...

    எளிய விளக்கம். இதைப்பார்த்து நான் 6 அவுட்லைன் வரும் எழுட்த்தை உருவாக்கி உள்ளேன். உங்கள் பார்வைக்கு எப்படி அனுப்புவது?-நாதன்

    பதிலுக்குக் காத்திருக்கிறேன்

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்