Wednesday, July 20, 2011

போட்டோஷாப் பாடம் 22 - LAYER MASK

வணக்கம் நண்பர்களே! நண்பர் அருண்வெற்றிவேல் அவர்கள் masking பற்றி பதிவிடும் படி கேட்டிருந்தார்.அவருக்காக இந்த பதிவு.போட்டோஷாப்பில் மிகவும் முக்கியமான அம்சங்களில் masking ம் ஒன்று.மாஸ்க்கிங்கில் பலவகை  
உள்ளது.அடுத்தடுத்த பாடங்களில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.இன்று நாம் பார்க்கப்போவது Layer Mask மிக எளிதாக செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான படங்களை திறந்து கொள்ளுங்கள்.
                                                                       படம்-1
                                                                           படம்-2
படம்-1 ஐ கீழே வைத்து அதன் மேல் படம்-2 ஐ Copy > paste செய்து விடவும்.
இப்பொழுது உங்கள் Layer Pallet ன் படம் இது போல் இருக்கும்.
 இப்பொழுது உங்கள் Layer Pallet ல் கீழே fx என்ற பட்டனுக்கு பக்கத்தில் உள்ள Add Layer Mask என்ற பட்டனை அழுத்தவும்.இப்பொழுது Layer 1 க்கு பக்கத்தில் வெள்ளை நிற கட்டம் தோன்றியிருக்கும்.


இப்பொழுது Gradient tool தேர்வு செய்து கீழே படத்தில் உள்ளது போல் செட் செய்து கொள்ளுங்கள்.




இப்பொழுது Layer -1 ன் பக்கத்தில் இருக்கும் வெள்ளை கட்டத்தில்Click செய்து கீழே படத்தில் காட்டியிருக்கும் இடத்தில் Gradient Apply செய்யுங்கள்.(இங்கு Gradient Apply செய்யும் இடம் இந்த படத்திற்கு மட்டுமே.நீங்கள் வேறு படத்தில் வேலை செய்யும் போது அந்த படத்திற்கு ஏற்றவாறு இடத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.)
இப்பொழுது நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் இரண்டு படமும் ஒட்டியதே தெரியாமல் இணைந்து காணப்படும்.
என்ன அருண்வெற்றிவேல் பதிவு பிடித்திருக்கிறதா?புரிகிறதா?உங்கள் கருத்தை கூறுங்கள்.Mask செய்த மற்ற படம்
                                                                    படம்-1
                                                                        படம்-2
                                                                   இறுதியாக
பதிவு எப்படி கருத்தை கூறுங்கள்.
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்

9 comments:

  1. நல்ல பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றாக இருந்தது..!! :)

    ReplyDelete
  3. Those who design advertisements can use this to best effect. Thanks

    ReplyDelete
  4. நல்ல பதிவு. அருமை.தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  5. என்னுடைய கோரிக்கையை ஏற்று பதிவு இட்டதிற்க்காக எங்கள அன்னண், வருங்கால முதல்வர் SHRIDHAR அவர்கலுக்கு ஆயிரம் கோடி நண்றியை அன்புடன் தெறிவித்துகொள்கிரேன்.
    உங்களின் இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது நண்பா.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  6. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி! அருண்வெற்றிவேல் என்ன சொல்றீங்க,உசுப்பேத்தி உசுப்பேத்தியே என்ன ரணகள படுத்திவிடுவீர்கள் போல இருக்கிறது.

    ReplyDelete
  7. Migavum Arumai. Mikka Nandri.

    ReplyDelete
  8. இன்று தான் உங்கள் தளத்தை பார்த்தேன். அருமை. உங்கள் ரசிகனாகவே மாறிவிட்டேன். வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி.
    ஸ்ரீசிவம் செல்வராஜன்

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்