Thursday, July 21, 2011

போட்டோஷாப் பாடம் 23- BURNING EFFECT

வணக்கம் நண்பர்களே!
இன்று போட்டோஷாப்பில் Burning effect உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான படத்தை திறந்து கொள்ளவும்.பொதுவாக இதுபோன்ற டிசைன் உருவாக்குவதற்கு loose hair ஆக உள்ள படத்தை தேர்வு செய்து கொண்டால் படம் நமக்கு மிகவும் நேர்த்தியாக கிடைக்கும்.சரி பாடத்திற்கு செல்வோம்.

Ctrl + U அழுத்தி வரும் விண்டோவில் கீழே காண்பது போல் செட் செய்து கொள்ளுங்கள்.
Ctrl + J அழுத்தி படத்தை DUPLICATE செய்து கொள்ளவும்.இப்பொழுது Filater > Blur >
Gaussian Blur சென்று radius 1.6 pixel என செட் செய்து கொள்ளுங்கள்.
 இப்பொழுது இந்த லேயரின் Blending Mode ஐ Overlay க்கு மாற்றுங்கள்.
இப்பொழுது Ctrl + E அழுத்தி Merge செய்து கொள்ளவும்.இரண்டு லேயர்களும் ஒன்றாகிவிடும்.இப்பொழுது மீண்டும் ctrl + j அழுத்தி Duplicate செய்துகொண்டு
Filter > Blur > Motion Blur சென்று கீழே உள்ளதுபோல் செட் செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது இந்த லேயரின் Blendig Mode ஐ overlay க்கு மாற்றிவிட்டு Ctrl + E அழுத்தி Merge செய்து கொள்ளுங்கள்.இப்பொழுது படம் இது போல் வந்திருக்கும்.
இப்பொழுது புதிய லேயர் உருவாக்கிக்கொண்டு அதை வெள்ளை நிறத்தால் நிரப்பி Blending Mode ஐ Overlay க்கு மாற்றிக்கொள்ளவும்.
இப்பொழுது மீண்டும் புதிய லேயர் உருவாக்கிக்கொண்டு அதை (#000099) இந்த
கலரால் நிரப்பவும்.இப்பொழுது கலர் Pallet ல் Foreground மேலே சொன்ன கலராகவும் Background கருப்பு நிறமாகவும் இருக்கவேண்டும்.இது அவசியம்.
இப்பொழுது Filter > Render சென்று clouds Ok செய்து அதன் Blending Mode ஐ Overlay எனவும் Opacity =57% எனவும் செட் செய்யுங்கள்.
இப்பொழுது புதிய லேயர் உருவாக்கி வெள்ளை நிறத்தால் நிரப்பி அதன் Blending Mode ஐ Difference ஆக மாற்றவும்.இப்பொழுது படம் இது போல் வந்திருக்கும்.
இப்பொழுது இறுதி நிலைக்கு வந்து விட்டோம்.மிக கவனமாக பாருங்கள்.உங்கள் Layer Pallet ல் background layer ஐ Duplicate செய்து அதை Layer 3 ன் கீழே வைத்து அதன் Blending Mode ஐ Darken ஆக மாற்றிவிடுங்கள்.


என்ன நண்பர்களே!பதிவு புரிகிறதா?பிடித்திருக்கிறதா?கவனமாக பாருங்கள்.இரண்டு மூன்றுமுறை செய்து பழகினால் சுலபமாக வந்து விடும்.மேலே உள்ள முறையின் படி படங்களில்  மட்டுமே இது போல effect உருவாக்கமுடியும்.எழுத்துக்களுக்கு வேறு முறையில் செய்ய வேண்டும்.எழுத்துக்களுக்கு இந்த effect கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதை கீழே பாருங்கள்.வாசகர்கள் விரும்பினால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.மற்றொரு பதிவில் போடுகிறேன்.கருத்துக்களை அவசியம் கூறுங்கள்.




என்றும் நேசமுடன்

7 comments:

  1. சூப்பரா இருக்கு நண்பா.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. சித்திரம் பேசுதடி . மிக சிறப்பான பதிவு

    ReplyDelete
  3. செய்து பார்த்தேன். நன்றாக வந்தது.புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டேன்.நன்றி.இதே போல் வித்தியாசமாக தொடரவும்.

    ReplyDelete
  4. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!சாய்தாசன் உங்களை போன்றவர்களிடம் இருந்து வரும் கருத்துக்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.என்றும் என் நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள்!

    ReplyDelete
  5. இதைவிட மிகவம் இலகுவாக செய்வதற்கும் வழி உண்டு நன்பரே... நீங்கள் சொன்ன மாதிரி "Ctrl + U அழுத்தி வரும் விண்டோவில் கீழே காண்பது போல் செட் செய்து " கொண்டு இலகுவாக Invert செய்த கொண்டு ctrl+U ல் saturation ஐ adjust செய்வதன் மூலமும் மாற்ற டமுடியும்..◌ாமப மாற்ற முடியம்... பயனுள்ள பதிவு.. நன்றிகள்..

    ReplyDelete
  6. super rommba pudichiruggu yenaggu bayanullatha eruggu

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்