Friday, July 22, 2011

போட்டோஷாப் பாடம் 24 - Shape Cluster Photo Display Effect

வணக்கம் நண்பர்களே!இன்று போட்டோஷாப்பில் Shape Cluster Photo Display Effect கொண்டு வருவது எப்படி என்று பார்ப்போம்.1000 *1000 அளவுடன் Background வெள்ளை நிறத்துடன் ஒரு file Open செய்து கொள்ளவும்.


EDIT > PREFERENCE > GUIDE,GRID,SLICES சென்று வரும் விண்டோவில் கீழே உள்ளது போல் செட் செய்து கொள்ளுங்கள்.சிகப்பு வட்டத்துக்குள் இருப்பது மட்டும் போதும்.நமக்கு தேவையானது அது மட்டும் தான்.
இப்பொழுது View > Show > Grid  ஐ Click செய்யுங்கள்.
புதிய லேயர் உருவாக்கிக்கொள்ளவும்.
இப்போது Rectangular Marquee Tool தேர்வு செய்து கீழே படத்தில் இருப்பது போல் கட்டம் போடவும்.கட்டம் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக நான் சிகப்பு கலரால் Mark செய்துள்ளேன்.
இப்பொழுது Edit > Fill சென்று கருப்பு நிறத்தால் நிரப்பவும்.Ctrl + d அழுத்தி deselect செய்துவிடவும்.
இப்பொழுது கீழே இருப்பதுபோல் 10 கட்டம் விட்டு Rectangular Tool ஆல் mark செய்து கொள்ளுங்கள்.

மீண்டும் சொல்கிறேன் உங்களுக்கு கட்டம் தெரிய வேண்டும் என்பதற்காகவே சிகப்பு நிறத்தால் Mark செய்துள்ளேன்.நீங்கள் கட்டம் போடும் போது Shift keyஐ அழுத்திக்கொண்டு போடவும். இப்பொழுது Backspace பட்டனை அழுத்தவும்.பிறகு view > show சென்று Grid ஐ deselect செய்து விடவும்.பின் Ctrl + d அழுத்தவும்.இப்போது படம் கீழே உள்ளது போல் இருக்கும்.
இப்பொழுது Layer Pallet ன் கீழே இருக்கும் fx பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Drop shadowதேர்வுசெய்து கீழேகாண்பது போல்மதிப்பு கொடுங்கள்.
இப்பொழுது படம் மேலே உள்ளது போல் வந்திருக்கும்.இனி நமக்கு தேவையான படத்தை தேர்வு செய்து கட்டத்தில் Copy Paste செய்யவும்.
free transform tool தேர்வு செய்து படத்தை சரியாக கருப்பு கட்டத்துக்குள் பொருத்தவும்.இப்போது நமது Layer Pallet இது போல் இருக்க வேண்டும்.
இப்போது  Layer >  Create clipping Mask ஐ Click செய்யுங்கள்.நமக்கு தேவையான Effect தயார்.

உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.அதுவே எனது அடுத்தடுத்த பதிவுகளுக்கு ஊக்கமாய் அமையும்.
என்றும் நேசமுடன்

10 comments:

  1. அருமையான விளக்கம்...
    நல்லது..

    ReplyDelete
  2. உங்கள் பதிவுகள் அனைத்தும் வித்தியாசமானதாகவே இருக்கிறது.

    கலக்குங்க...

    -அன்புடன் பல்லவன்

    ReplyDelete
  3. ஹலோ ஸ்ரீதர் sir,

    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மற்றவர்களை விட
    எளிதில் புரிகிற மாதிரி வித்தியாசமாகவே இருக்கிறது.
    பணி தொடரட்டும்,வாழ்த்துக்கள்.........

    ReplyDelete
  4. Great effects. For every one of your posts you make think how to do it in gimp. you know gimp? why not write about that?

    ReplyDelete
  5. நல்ல பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. கருத்துரையிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  7. ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan) said...

    Great effects. For every one of your posts you make think how to do it in gimp. you know gimp? why not write about that?

    அதற்குதான் நீங்கள் இருக்கிறீர்களே பிரபு!எனது பிளாக்கில் லொகோ இணைக்க உதவ முடியுமா? போட்டோஷாப்பில் இருக்கும் அனுபவம் வலைப்பூ
    வடிவமைப்பில் எனக்கு இல்லை.என்றும்போல் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  8. ”இப்போது Layer > Create clipping Mask ஐ Click செய்யுங்கள்.நமக்கு தேவையான Effect தயார்.”
    என்று சொல்லியிக்கிறீர்கள்-ஆனால் லேயர் மெனுவில் கிளிப்பிங் மாஸ்க் என்பது இல்லையே? - ரங்கா

    ReplyDelete
  9. கவனமாக பாருங்கள் ரங்கா

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்