Sunday, July 24, 2011

போட்டோஷாப் பாடம் 26 - அவதார்

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப் வெறும் படங்களை வெட்டி ஒட்டவும்,பவுடர் பூசவும் மட்டும்
அல்ல.அந்த கால கருப்பு வெள்ளையில் இருந்து விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட அவதார் வரையிலும்,இன்னும் வரப்போகும் அத்தனை
நுட்பங்களையும் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் மகா சமுத்திரம்.புதியவர்
களுக்கு புரியாதபுதிர்.புரிந்தவர்களுக்கு எதைகேட்டாலும் தரும் அற்புத 
விளக்கு.அப்பேற்பட்ட போட்டோஷாப்பின் புதிய பரிமானத்தை உங்களிடம்
கொண்டு வந்து சேர்ப்பதே என் நோக்கம்.
இன்று போட்டோசாப்பில் அவதார் போல் படங்களை மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.தேவையான படத்தை திறந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது Pen Tool தேர்வு செய்து உடல் பகுதியை மட்டும் தேர்வு செய்யுங்கள்.
Ctrl + J அழுத்தி Duplicate செய்துகொள்ளுங்கள்.இப்பொழுது இலைகள் அதிகம் இல்லாத வெறும் குச்சிகளுடன் கூடிய மரம் உள்ள படத்தை தேர்ந்தெடுங்கள்.
இப்போது பெண்ணின் படத்தின்  மீது மரம் உள்ள படத்தை copy paste செய்து அதன் blending mode ஐ vivid-light க்கு மாற்றவும்.
இப்போது Ctrl + G அழுத்துங்கள்.இப்போது மரம் உள்ள லேயரின் Opacity ஐ 70% என வைத்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது Ctrl + U அழுத்தி வரும் விண்டோவில் கீழே காண்பது போல் மதிப்பு கொடுங்கள்.
இப்போது Layer-1 ஐ தேர்வு செய்து Ctrl + U அழுத்துங்கள்.வரும் விண்டோவில் கீழே உள்ளது போல் மதிப்பு கொடுங்கள்.

இப்பொழுது Layer-1 ஐ Duplicate செய்து அதன் Blend Mode ஐ Overlay க்கு மாற்றவும்.

இப்போது மீண்டும் Ctrl + U அழுத்தி வரும் விண்டோவில் கீழே இருக்கும் செட்டிங்கை செய்யவும்.

இப்போது படம் இது போல் இருக்கும்.
இனி Filter > noise > add noise சென்று கீழே உள்ளது போல் செட் செய்யவும்.

தேவைப்பட்டால் கண்களுக்கு மிக லேசாக சிகப்பு புள்ளி வைத்து ஏலியன் effect 
உருவாக்கி கொள்ளலாம்.



என்ன நண்பர்களே!பதிவு எப்படி?கருத்தை கூறுங்கள்.உங்கள்கருத்தை வைத்து
தான் இனி என் அடுத்த பதிவுகள் இருக்கும்.

10 comments:

  1. பாஸ்..பாக்கவே பயமா இருக்கு.நல்ல பதிவு. :)

    ReplyDelete
  2. எவ்ளோ அழகா தெளிவா விளக்குறீங்க பாஸ்.. நைஸ்

    ReplyDelete
  3. இப்படியெல்லாம் கூட செய்யமுடியுமா?

    ReplyDelete
  4. வாவ்.., சூப்பரா கலக்குறிங்க நண்பா.இனி பன்டோறா தீவுக்கு டிக்கேட் எடுத்து ரயில்ல போகவேன்டிய அவசியமே இல்லை நண்பா.
    பதிவு சூப்பரோ சூப்பருங்கோ....
    வாழ்க நலமுடன்& வளமுடன்.

    ReplyDelete
  5. @சேலம் தேவா
    தேவா இதுக்கே பயந்தா எப்பூடி

    ReplyDelete
  6. @நண்பன்
    இன்னும் எவ்வளவோ இருக்கு நண்பா!

    ReplyDelete
  7. @arunvetrivel
    நன்றி அருண் வெற்றிவேல்.அனைத்து பதிவிற்கும் வாங்க.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்