Friday, July 22, 2011

போட்டோஷாப் பாடம் 25 - கண்ணீர் வரவழைக்க

வணக்கம் நண்பர்களே!
இன்று நமது படங்களில் தத்ரூபமாக கண்ணீர் வரவழைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.கண்கள் நல்ல close up shot ஆக இருக்கும் படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

புதிய லேயர் உருவாக்கிக்கொள்ளுங்கள். இப்பொழுதுPen Tool அல்லது Lasso Tool தேர்வு செய்து கண்ணீர் வழிவதைப்போல வடிவத்தை வரைந்து அதை  கருப்பு நிறத்தால் நிரப்பவும்.
இப்போது அதன் Layer mode ஐ screen க்கு மாற்றிவிடவும்.இப்போது புதியலேயரின் Blending option ஐ கீழ்கண்டவாறு மாற்றவும்.
                                                                 DROP SHADOW

                                                                    INNER SHADOW
                                                                    INNER GLOW
                                                            BEVEL AND EMBOSS
GRADIENT OVERLAY

மிக எளிமையான பாடம் .கவனமாக மேலே உள்ள செட்டிங்கை செய்யுங்கள்.
இப்போது படம் இது போல வரும்.

இப்போது Pencil tool 1px இருக்குமாறு செட் செய்து கண்ணீரின் மீது கீழே காட்டியிருப்பது போல் புள்ளிகள் வைக்கவும்.
இப்போது Blur Tool தேர்வு செய்து வெள்ளை புள்ளிகளின் மேலே லேசாக தேய்த்து விடவும்.
என்ன நண்பர்களே!கண்ணீர் அசலாக இருக்கிறதா.

இதில் கொடுத்திருக்கும் blending option இந்த படத்தின் Skin கலருக்கு ஏற்றது போல் கொடுக்கப்பட்டிருக்கிறது.வேறு படத்திற்கு கொஞ்சம் முன்னர் பின்னர் இருக்கலாம்.செட்டிங்கை கொஞ்சம் உங்கள் படத்திற்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.
மறக்காமல் கருத்தைக்கூறுங்கள்.
என்றும் நேசமுடன்


11 comments:

  1. கத்துகிட்டு ஆனந்தகண்ணீர் விட்டேன் பாஸ்..!! :)

    ReplyDelete
  2. நல்ல விளக்கம் தெளிவாக புரிகிறது...

    ReplyDelete
  3. மிக சிறப்பான சேவை

    ReplyDelete
  4. அழகான பொன்னுங்கல இப்படி கண்ணீர் சிந்த வச்சிட்டிங்கலே நண்பா நீங்க கில்லாடிதான்...
    பதிவு அருமையாக உள்ளது நண்பா.
    வாழ்க வளமுடன்.,

    ReplyDelete
  5. நல்ல பதிவு.
    தொடர்ந்து படிக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. சேலம் தேவா,
    சவுந்தர்,
    சாய்தாசன்,
    அருண்வெற்றிவேல்,
    ரத்னவேல்
    அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  7. அடடா நீங்களும் நம்ம ஆள் தான் போல.. ! விளாசுங்க பாஸ்..! எனக்கு கத்துக்கிட்ட மாதிரி இருக்கும்..!

    ReplyDelete
  8. தங்களின் அனைத்து பதிவுகளையும் படித்தாகி விட்டது அனைத்தும்
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    ReplyDelete
  9. In this lesson i have read from the photoshop star tutorials. So very very thanks.

    ReplyDelete
  10. In this lesson i have read from the photoshop star tutorials. So very very thanks.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்