Monday, July 25, 2011

போட்டோஷாப் பாடம் 27-கண்களை கவரும் CUTTING FRAME

வணக்கம் நண்பர்களே!
இன்று போட்டோஷாப்பில் நமது புகைப்படத்திற்கு கண்ணைக்கவரும் அழகிய கட்டிங் பிரேம் போடுவது எப்படி என்று பார்ப்போம்.தேவையான படத்தை திறந்து கொள்ளவும்.Rectangle Tool தேர்வு செய்து படத்தில் காட்டியுள்ளபடி கட்டம் போடவும்.

இப்போது கட்டத்தின் உள்ளே Right Click செய்து  free transform path Select செய்து 
கட்டத்தை உங்களுக்கு பிடித்தவாக்கில் சாய்த்துக்கொள்ளுங்கள்.இப்போது மீண்டும் கட்டத்தின் உள்ளே Right Click செய்து Make Selection தேர்வு செய்து Feather =0
என மதிப்பிட்டு Ok தரவும்.இப்போது இரண்டு முறை Duplicate செய்து கொள்ள வும்.

இப்போது Layer -1 ஐ தேர்வு செய்து Edit > Fill சென்று உங்களுக்கு பிடித்த கலரால் நிரப்பி அதன் Opacity = 40% வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது Background Layer ஐ தேர்வு செய்து முதலில் போட்ட கட்டத்திற்கு கீழே
மற்றொரு கட்டம் போட்டு அதேபோல செட்டிங் செய்து ஒரே ஒரு முறை மட்
டும் Duplicate செய்யவும்.இதே முறையை பின் பற்றி உங்களுக்கு எத்தனை கட்டம் வேண்டுமோ அத்தனை கட்டங்கள் போட்டுக்கொள்ளுங்கள்.நான் 4 கட்டங்கள் போட்டுள்ளேன்.

இப்போது Layer-1Copy ஐ தேர்வு செய்து அதன் Blending Option ஐ கீழே உள்ளது போல் செட் செய்யுங்கள்.
                                                                             STROKE

 DROP SHADOW
இந்த செட்டிங் முடிந்தவுடன் மீண்டும் Layer-1Copy மீது Right Click செய்து Copy Layer
Style ஐ Select செய்யுங்கள்.
இப்பொழுது 2,3,4 ஆகிய மூன்று லேயர்களின் மீதும் தனி தனியாக Right Click செய்து Paste Layer Style ஐ தேர்வு செய்யவும்.நமக்கு தேவையான Effect தயார்.

இதை நமக்கு பிடித்தவாறு Background set செய்து கொள்ளலாம்.இதில் இன்னொரு
விசயம் நான்கு கட்டங்களையும் நமக்கு பிடித்தவாறு எந்தப்பக்கம் வேண்டுமா
னாலும் திருப்பி வைத்துக்கொள்ளலாம்.


பதிவை பற்றி தங்கள் கருத்தை கூறுங்கள்.                 என்றும் நேசமுடன்

12 comments:

 1. Very good. But you give up all your tricks even before you begin to become popular.

  first run trailer of upcoming posts like mdkhan first. then post the full trick. in that way you can attract more persons per post.

  ReplyDelete
 2. supero super.
  Sherif

  ReplyDelete
 3. உங்களது வலைமனை அமைப்பில் பதிவுகளை சுருக்கிக் காட்டும் அமைப்பை நீக்கி முழு பதிவுகளாகவே முகப்புப் பக்கத்தில் தெரியும் படி அமைக்க இயலுமா?
  குறிச்சொற்களை பயன்படுத்திப் படிக்கும் போது தற்போது இருக்கும் அமைப்பில் பதிவுகளின் சுருங்கிய வடிவம் மட்டுமே தெரிகிறது...
  நன்றி.

  ReplyDelete
 4. இந்த பாடத்தில் Rectangle Tool பதிலாக Rectangular marquee டூல் தேர்வு செய்ததால், ஆரம்பத்தில் கொஞ்சம் குழம்பி போனேன்.
  அழகான டிசைன்.

  அசத்துங்க...
  -அன்புடன் பல்லவன்

  ReplyDelete
 5. @ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan)
  வருகைக்கு நன்றி பிரபு!நீங்கள் கூறியது போல் செய்ய முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 6. But again you are not running trailer like tamilpctraining.blogspot.com. his secret of success is running trailer and heightening readers expectation.

  by trailer i mean mentioning just the trick without revealing it first and after one or two days posting full trick.

  ReplyDelete
 7. SIR PLS CONTACT 09443025689

  ReplyDelete
 8. எளிதான தள அமைப்பு கண்ணுக்கு உறுத்தாமல் அழகாய் இருக்கிறது..

  சில தளங்களை பார்த்தாலே எரிச்சலாய் இருக்கும் அப்படியான ஒரு சுய விளம்பரம் கொடுத்திருப்பார்கள் படிப்பவர்களையும் ஒருவிதமான கட்டாய சூழலுக்கு நிர்பந்திப்பார்கள்..

  இப்படியே தொடருங்கள் வாழ்த்துகள்...முடிந்தால் பிடிஎப் ஆக தொகுத்து ஏதாவது ஒரு தளத்தில் அப்லோட் செய்து பதிவிறக்க உரல் உங்கள் தளத்திலேயே இனைப்பு கொடுங்கள் தினம் இனையம் வர முடியாதவர்களுக்கும் உதவும்.

  வாழ்க வளமுடன்
  ஞானசேகர்

  ReplyDelete
 9. தங்களின் அனைத்து பதிவுகளையும் படித்தாகி விட்டது அனைத்தும்
  அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்