Wednesday, July 27, 2011

போட்டோஷாப் பாடம் 28 - OUT OF FRAME

வணக்கம் நண்பர்களே!
இன்று போட்டோஷாப்பில் out of frame செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.படத்தின் தன்மையை பொருத்து பல முறைகளில் இந்த Effect உருவாக்கலாம்.அதில் ஒரு முறையை எளிதாக செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான படத்தை திறந்து கொண்டு புதிய லேயர் உருவாக்கவும்.rectangle marquee toolஆல் எந்த இடத்தில் நமக்கு Frame வேண்டுமோ அங்கே ஒரு கட்டம் போட்டு அதை கருப்பு நிறத்தால் நிரப்பவும்.
இப்போது Layer 1 ன் fill = 0%வைக்கவும்.
இப்போது Layer 1 ன் Blending Mode தேர்வு செய்து கீழே உள்ளது போல் செட் செய்ய
வும்.
இப்போது Edit > Transform > Perspective சென்று frame ஐ சற்று மேலிருந்து கீழாக அழுத்
தவும்.


இப்போது background Layer தேர்வு செய்து Polygonal Lasso Tool தேர்வு செய்து Feather 1px
செட் செய்து படத்தை சுற்றி கோடு போடுங்கள்.
இப்போது Select > inverse தேர்வு செய்து Delete பட்டனை அழுத்துங்கள்.
இப்போது  Layer 1 right click செய்து Convert to Smart Object ஐ click செய்யவும்.மீண்டும் right click செய்து Rasterize Layer ஐ click செய்யவும்.இப்போது Polygonal Lasso Tool தேர்வு
செய்து படத்தில் காட்டியுள்ளபடி frame ஐ delete செய்யவும்.
இப்போது background layer தேர்வு செய்து  புதிய layer உருவாக்கி கொள்ளவும்.இப்
போது Brush Tool தேர்வு செய்து (size 72 px, hardness: 0%, opacity: 8%, flow: 50%) படத்தை
சுற்றி தேவைக்கேற்ப shadow உருவாக்கிக்கொள்ளவும்.
தேவையென்றால் உங்கள் கற்பனைக்கேற்ப frame,background ஐ விருப்பம் போல்
மாற்றிக்கொள்ளுங்கள்.

பதிவை பற்றி கருத்தை கூறுங்கள்.
என்றும் நேசமுடன்

7 comments:

  1. எங்கேயாவது போய் இடிச்சிக்கப்போறாரு பாஸ்..!!நல்ல பதிவு..!! :)

    ReplyDelete
  2. பைக் நல்லா இருக்கு, அதைவிட இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது நண்பா.
    வாழ்க வளமுடன்..,

    ReplyDelete
  3. pop-out பற்றிய பதிவு மிக எளிதாக இருந்தது

    ReplyDelete
  4. இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது நண்பா.

    ReplyDelete
  5. Super sir.. pls continue ur lessons...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்