Friday, July 29, 2011

போட்டோஷாப் பாடம் 29 - CUTE GRID EFFECT

வணக்கம் நண்பர்களே!
இன்று வண்ணமயமான CUTE GRID EFFECT உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.1280 x 1024 அளவில் புதிய File உருவாக்கிக்கொள்ளவும்.Background -White.
இப்போது view > Ruler Click செய்யவும்.Ruler மேல் Right Click செய்து  percent தேர்வு செய்து 10 percent இடைவெளியில் கீழே படத்தில் உள்ளது போல் கட்டம்
போடவும்.


புதிய லேயர் உருவாக்கிகொள்ளவும்.
இப்போது Single Row Marquee Tool தேர்வு செய்து ஒவ்வொரு கோட்டின் மீதும் click
செய்யவும்.
இப்போது Edit > Fill சென்று கருப்பு நிறத்தால் நிரப்பவும்.இப்போது Ctrl +D அழுத்தி
deselect செய்து விட்டு View > Show >Guides  Click செய்யவும்.
இப்பொழுது தேவையான படத்தை தேர்வுசெய்து கட்டத்தில்  Copy, paste செய்யவும்.படம் உள்ள லேயரை Layer 1க்கும் background க்கும் இடையில் வைத்து விடவும்.

இப்போது magic Wand Tool தேர்வு செய்து உங்களுக்கு விருப்பப்பட்ட இடங்களை
shift key ஐ அழுத்திக்கொண்டு தேர்வு செய்யவும்.இப்போது புதிய லேயர் உருவாக்
கிக்கொண்டு Edit > Fill சென்று கருப்பு நிறத்தை தேர்வு செய்யவும்.கீழே படத்தை
பார்க்கவும்.

இப்போது Layer 1 ஐ தேர்வு செய்து Magic Wand Tool ஆல் கீழேபடத்தில் உள்ளது போல் கட்டம் போட்டுக்கொள்ளவும்.
இப்போது Layer > new adjustment layer >hue/saturation சென்று கீழே உள்ளது போல் மதிப்பு கொடுங்கள்.
இப்போது adjustment layer ன் Blending Mode ஐ color ஆக மாற்றவும்.
இப்பொழுது படம் இதுபோல் இருக்கும்.
இப்பொழுது மீண்டும் Layer 1 ஐ தேர்வு செய்து முன்பு செய்தது போல் விடுபட்ட கட்டங்களில் உங்களுக்கு பிடித்த வண்ணத்தை நிரப்புங்கள்.


இப்போது Layer 1ன் Blending mode ஐ click செய்து கீழே உள்ளது போல் செட் செய்யுங்கள்.

 
என்ன நண்பர்களே!பதிவு எப்படி. முதல் முறை படிக்கும் போது சற்று குழப்பமாகவும் போராகவும் தோன்றும்.ஆனால் இது அற்புதமான கலைநயம் மிக்க படைப்பாகும்.நான்கைந்து முறை செய்து பார்த்தால் சுலபமாகவந்து
விடும்.
இதற்கு மேல் தேவைபட்டால் உங்கள் கற்பனைகேற்ப வடிவமைத்து கொள்ளவும்.
                             
பதிவை பற்றிய தங்கள் கருத்தை கூறுங்கள்.
என்றும் நேசமுடன்

11 comments:

  1. தகவலுக்கு நன்றி ..செய்து பார்க்கணும்

    ReplyDelete
  2. mikka nandri thiru sridhar avargale
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  3. நீங்கள் ஈசியாக கட்டம் போடுங்கள். என்று சொல்லிவிட்டீர்கள். ஆனால் நான் போட்டால், கோனல்,மானல் ஆக வருகிறது...

    அருமையான கற்பனை..

    தூள் கிளப்புங்க...

    -அன்புடன் பல்லவன்.

    ReplyDelete
  4. நல்ல பதிவு..! பயன்படுத்திக்கொள்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி ஸ்ரீதர்..!

    ReplyDelete
  5. இன்ட்லியில் பாலோ செய்தமைக்கு மிக்க நன்றி..! இனி தொடர்ந்து உங்கள் பக்கம் வருவேன்..!

    ReplyDelete
  6. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  7. அருமையான பதிவுகள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் உங்கள் எண்ணம் பாராட்டுக்குரியது. தொடரட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்