Saturday, July 30, 2011

போட்டோஷாப் பாடம் 30 - IMAGE CHANGE PATTERNS

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் ஒரு Image ஐ Pattern ஆக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.
இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில் நாம் தேர்வு செய்யும் படங்களைப் பொறுத்து நமது செய்முறைகளும் மாறுபடும்.அதில் ஒரு முறையை

இன்று பார்ப்போம்.நான் ஒரு மரம் உள்ள படத்தினை தேர்வு செய்துள்ளேன்.
முதலில் போட்டோஷாப்பை Full Screen mode க்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
இப்பொழுது Ctrl +J அழுத்தி Duplicate செய்து கொள்ளவும்.இனி Image > Canvas size சென்று வரும் விண்டோவில் கீழே காண்பதை போல் செட் செய்யவும்.
இப்போது நம் படம் இதுபோல் இருக்கும்.
இப்போது Move Tool ஐ படத்தின் மீது அழுத்தி வலது புறம் இழுக்கவும்.இப்போது இரண்டு படம் இருக்கும்.
இப்போது Edit > Transform சென்று Flip Horizontal தேர்வு செய்யவும்.
Ctrl +E அழுத்தி Merge செய்து கொள்ளவும்.

இப்போது Ctrl + Jஅழுத்தி Duplicate செய்து கொள்ளவும்.இப்போது layer 1 ஐ தேர்வு
செய்து image > Canvas size சென்று வரும் விண்டோவில் கீழே உள்ளது போல் செட்
செய்யுங்கள்.
இப்போது படம் இது போல் இருக்கும்.
இப்போது முன்பு செய்ததை போல் Shift key ஐ அழுத்தி கொண்டு படத்தை கீழாக இழுத்து விடவும்.
இப்போது Edit > Transform சென்று flip vertical தேர்வு செய்யவும்.

இப்போது புதிய லேயர் உருவாக்கிக்கொள்ளவும்.Alt keyஐ அழுத்திக்கொண்டு
Layer > Merge visible Click செய்யவும்.

 இப்போது Edit  > transform சென்று Rotate 90 CW தேர்வு செய்யவும்.
இப்போது Ctrl keyஐ அழுத்திக்கொண்டு Layer 2 ன் மீது Click செய்யவும்.இப்போது
Image சென்று Crop click செய்யவும்.
இப்போது Layer 2 ன் Blending Mode ஐ Darken க்கு மாற்றவும்.
இப்போது புதிய Layer உருவாக்கிக்கொண்டு Alt Keyஐ அழுத்திக்கொண்டு Layer >
merge visible click செய்யவும்.
இப்போது Layer 3 தேர்வு செய்து Edit > transform > rotate click செய்யவும்.இப்போது Option பாரில் 45 மதிப்பு கொடுத்து Ok தரவும்.




இனி Layer 3 ன் Blend mode ஐ Lighten க்கு மாற்றவும்.
                                                                           FINAL
என்ன நண்பர்களே! பதிவை படித்து கருத்தை கூறுங்கள்.
என்றும் நேசமுடன்

13 comments:

  1. சூப்பர் டிசைன்..!!

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    உங்கள் பதிவுகளிருந்து கற்றுக் கொண்டு வருகிறேன்.
    உங்கள் பதிவுகளை பிரின்ட் அவுட் போட்டு வைத்துக் கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உபயோகமான தகவல். என் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வேன். நன்றி
    . ஸ்ரீசிவம் செல்வராஜன்

    ReplyDelete
  4. அட..அடா என்ன ஒரு அருமையான பதிவு.படிக்கவும்,பார்ப்பதர்க்கும் பயிற்ச்சி எடுப்பதற்க்கும் உங்கள் அனைத்து பதிவுகளும் எளிய முறையில் உள்ளது நண்பரே.,
    (ஆமாம்..துபாய்ல முனியாண்டி விலாஸ் ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிப்பிங்களோ?)...,
    ஹி....ஹி....வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  5. புதுசு புதுசா சொல்லி தந்து,
    கலக்குறீங்க சார்..........
    பணி தொடரட்டும்.

    ReplyDelete
  6. arumaiyana pathivu nanba...........

    ReplyDelete
  7. migavum nandraga vulladhu thiru sridhar avargale
    mikka nandri adhumattumalla ennudaya minnanjal mugavarikku neengal anuppum paadaththai katru varugireyen
    nandri
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  8. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  9. உங்களின் இந்த தகவலை எனது வலையிலும் போட்டு கொள்கிறேன் நன்றி

    ReplyDelete
  10. அன்புள்ள ஸ்ரீதர் வணக்கம் அருமையான உங்கள் சேவைக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் வெளியிடும் ஒவ்வொரு தலைப்பிலும் வெளியிடப்படும் குறிப்பு படங்களை என்னால் பார்க்க இயலவில்லை. அதை சரி செய்தால் மிகவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி.

    இப்படிக்கு
    (குவைத்திலிருந்து)
    கும்பகோணம் தாஜுதீன்

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள ஸ்ரீதர் வணக்கம், உங்களிடம் அனைத்து பாடமும் PDF யில் இருந்தால் எனக்கு அனுப்பவும். என்னை போல் புதிதாக கற்பவர்களுக்கு அது ரொம்ப உதவியாக இருக்கும். உங்கள் மெயிலுக்கு காத்திருக்கும் அன்பு நண்பன். இப்படிக்கு குடந்தை தாஜ் (65706970) mskthaaaj@gmail.com

      Delete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்