Saturday, July 2, 2011

போட்டோஷாப்-பாடம்-8 TWIRL EFFECT

வணக்கம் நண்பர்களே!
இன்று நாம் பார்க்கப்போவது TWIRL EFFECT.நாம் போட்டோஷாப்பில் நூற்றுக்கணக்கான TWIRL EFFECT உருவாக்கலாம்.சில எளிதாக இருக்கும்.சில சற்று கடினமாக இருக்கும்.நீங்கள் இவற்றை தெரிந்து கொள்வதோடு மட்டும் இல்லாமல் உங்கள் கற்பனை திறனுக்கேற்ப தேவையான இடத்தில் பயன்படுதிக்கொள்ள வேண்டும்.போட்டோஷாப்பிற்கு கற்பனைத்திறன் மிக மிக அவசியம்.சரி பாடத்திற்கு வருவோம்.


New File Open. Background உங்களுக்கு பிடித்த எந்த கலரில் வேண்டும் என்றாலும் வைத்துக்கொள்ளலாம்.நான் வெள்ளை நிறத்தையே வைத்துள்ளேன்.Brush tool தேர்வு செய்து கொள்ளுங்கள். Brush ன் Master Diameter-60px வைதுக்கொள்ளுங்கள்.

பின்பு படத்தில் நான் காட்டியுள்ளபடி உங்களுக்கு விருப்பமான கலரில் கோடுகள் வரைந்து கொள்ளவும்.
வரைந்து விட்டீர்களா.இனி
Filter - Distort - Twirl  சென்று வரும் விண்டோவில் Angle - 999 என மதிப்பிட்டு Ok தரவும்.

என்ன நண்பர்களே!பதிவு பிடித்திருக்கிறதா.மறக்காமல் உங்கள் ஓட்டையும், கருத்துக்களையும் வேண்டுகிறேன்.எனது பதிவுகள் பிடித்து எனக்கு முதன் முதலாக followers ஆன  அருண் வெற்றிவேல், சாய்தாசன், அஸ்மா, சேலம் தேவா, ஆகிய நால்வருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்

5 comments:

  1. செந்தில்Sunday, July 03, 2011

    உங்கள் புகைப்படக் கடை (PHOTO SHOP) பாடங்கள் மிகவும் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளன. தொடரட்டும் உங்கள் பாடங்கள். தொடருவேன் உங்களை ஒரு மாணவனாய். நன்றி

    ReplyDelete
  2. எளிமையான விளக்கம்..!! :)

    ReplyDelete
  3. திரு.சேலம் தேவா,மற்றும் திரு,செந்தில் அவர்களே!தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  4. migavum nandraga ulladhu nandri
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்