Friday, July 8, 2011

போட்டோஷாப்-பாடம்-11 STEEL CAGE

வணக்கம் நண்பர்களே!

இன்று சற்று பெரிய பதிவு.போட்டோஷாப்பில் இரும்பு கூண்டு உருவாக்குவது பற்றி பார்ப்போம்.முதலில் 20*4 அளவில் background Transparent ஆக இருக்குமறு ஒரு File உருவாக்கிகொள்ளுங்கள்.

இப்பொழுது மிகச்சிறியதாக இருக்கும் file ஐ zoom செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது பென்சில் டூல் தேர்வு செய்து அதன் Master Diameter = 5px செட் செய்து கீழே படத்தில் காட்டியுள்ளபடி கருப்பு நிறத்தால் கோட்டிங் கொடுங்கள்.
இனி  Edit - Define Pattern சென்று வரும் விண்டோவில் horizontal என்று பெயரிட்டு Ok செய்யுங்கள்.
இப்பொழுது Image - Rotate Canvas - 90CW clickசெய்யுங்கள்.
இப்பொழுது படம் இது போல் மாறி இருக்கும். இப்பொழுது மீண்டும் Edit - Define pattern சென்று வரும் விண்டோவில் vertical என்று பெயரிடுங்கள்.பெயரிட்டவுடன் file ஐ Close செய்து விடவும். Save செய்ய வேண்டிய அவசியமில்லை.

இப்பொழுது 500*500 அளவில் புதிய file உருவாக்கிகொள்ளுங்கள். BACKGROUND -WHITE.
     
புதிய layer உருவாக்கிகொள்ளுங்கள்.(புதிய layer உருவாக்க பார்க்க படம்)
                                    
                                                   
இப்பொழுது Eliptical marquee tool தேர்வு செய்து ஒரு வட்டம் போடுங்கள்.
வட்டம் போடும் போது shift key ஐ அழுத்திக்கொள்ளுங்கள்.வட்டம் ஒழுங்காக வரும்.
                                                                    
இப்பொழுது Edit - fill சென்று வரும் விண்டோவில் use = pattern என்றும், custom pattern என்பதில் நாம் முன்பு உருவாக்கிய horizontal pattern ஐ தேர்வு செய்யவும்.
மீண்டும் Edit - Fill சென்று வரும் விண்டோவில் vertical pattern தேர்வு செய்யவும்.

இப்பொழுது இந்த Layer ஐ Duplicate செய்து கொள்ளவும்.(duplicate செய்வது எப்படி என்பதை பார்க்க படம்).Layer 1 ன் மேல் Right Click செய்யவும்.


நீங்கள் Duplicate செய்தவுடன் உங்கள் layer pallet ல் Layer 1 Copy என்று ஒரு Layer உருவாகியிருக்கும்.

இனி  Filter - Distort - spherize சென்று வரும் விண்டோவில் Amount = 100, Mode = Normal என்று செட் செய்யவும்.
இனி layer 1 தேர்வு செய்து மேலே குறிப்பிட்ட செட்டிங்கை மீண்டும் செய்யவும்.கவனமாக பார்க்கவும்.இதில் Amount ன் மதிப்பு= -100 (மேலே உள்ளதில் +100)


இப்பொழுது படம் இது போல் வந்திருக்கும்.

இப்பொழுது ctrl+d அழுத்துங்கள்.படத்தை சுற்றி இருந்த கருப்பு வெள்ளை புள்ளி மறைந்து விடும்.
இப்பொழுது நமக்குத்தேவையான இரும்பு கூண்டு தயார்.இது பார்ப்பதற்கு அடர்த்தியாக தெளிவில்லாதது போல் இருக்கும்.இதை சில செட்டிங்குகள் மூலம் சரி செய்ய போகிறோம்.இப்பொழுது நமது Layer pallet ல்   இரண்டு Layer கள் உள்ளது.ஒன்று Layer1.மற்றொன்று Layer 1 copy.இப்பொழுது இவற்றின் Bevel &Embos மற்றும் Gradiant Overlay செட்டிங்குகளை மாற்ற வேண்டும்.
முதலில் layer pallet ல் layer 1 copy தேர்வு செய்து கீழ் கண்டவாறு செட்செய்து கொள்ளுங்கள்.

BEVEL AND EMBOS


GRADIENT OVERLAY


இப்பொழுது Layer 1 தேர்வு செய்து அதற்கும் மேலே சொன்ன செட்டிங்கையே செய்யவும்.செட் செய்தவுடன் வந்த படம் கீழே.

இனி நமக்கு தேவையான படத்தை இரண்டு Layer க்கும் இடையில் வைத்து விடவும்.


என்ன நண்பர்களே!ஒரு முறைக்கு பல முறை முயன்று பாருங்கள்.உங்கள் கற்பனைக்கேற்ப பல வடிவங்கள் உருவாக்கலாம்.
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்

4 comments:

  1. Super Friend...

    Keep Posting...

    Expecting more tutorial from you

    By
    Hari (http://hari11888.blogspot.com)

    ReplyDelete
  2. வாவ்... சூப்பரா இருக்கு இந்த பதிவு.

    ReplyDelete
  3. அருண் வெற்றிவேல், தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  4. உபயோகமான தகவல் நன்றி
    Srisivam Selvarajan

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்