Monday, July 11, 2011

போட்டோஷாப் பாடம்-13 DOTTED PHOTO

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் இன்று Dotted photo உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் 3*3 அளவில் Background Transparent ஆக இருக்குமாறு ஒரு file ஐ உருவாக்கிக்கொள்ளவும்.
மிகச்சிறியதாக இருக்கும் fileஐ zoom செய்துகொள்ளவும்.

foreground வெள்ளை நிறத்தில் இருக்குமாறு செட் செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது பென்சில் டூல் தேர்வு செய்து அதன் Master diameter =1px வைத்துக்கொள்ளுங்கள்.இப்பொழுது கீழே படத்தில் காட்டியுள்ளபடி மேல் மூலையில் பென்சில் டூலால் ஒரு கோட்டிங் கொடுங்கள்.
 
EDIT > DEFINE PATTERN தேர்வு செய்து வரும் விண்டோவில் ஏதேனும் பெயர் கொடுத்து  Ok செய்யுங்கள்.
இனி file ஐ Close செய்து விடுங்கள்.சேமிக்கத்தேவையில்லை.
இனி உங்களுக்கு விருப்பமான படத்தை தேர்வு செய்து Layer > New Fill Layer > Pattern
தேர்வு செய்து வரும் விண்டோவில் நீங்கள் ஏற்கனவே தயார் செய்துள்ள Pattern ஐ தேர்வு செய்யவும்.

அல்லது நேரடியாக EDIT > FILL சென்றும் Pattern ஐ தேர்வு செய்யலாம்.

                                                     Before                                       After


மற்றொரு வடிவம். இதற்கு கீழ்கண்ட மாடலில் Pattern உருவாக்கி கொள்ளுங்கள்
வழக்கமாக பின்னூட்டமிடும் நண்பர்கள் கூட கருத்து கூறவரவில்லை.காரணம் தெரியவில்லை.எது எப்படி இருந்தாலும் பதிவுகள் தொடரும்.
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்

11 comments:

  1. "வாவ் சூப்பர்" தொடருங்கள்... தொடருகின்றேன்.

    -அன்புடன் பல்லவன்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி பல்லவன்.தங்கள் வருகைக்கு நன்றி!தொடர்ந்து வாருங்கள்.
    என்றும் நேசமுடன்
    ஸ்ரீதர்

    ReplyDelete
  3. நான் கண்டிப்பா தொடர்ந்து வருவேன் நண்பா..நீங்க போட்டோசாப் பாடத்தை கலர் கலரா கலக்குங்க நண்பா.
    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  4. கண்டிப்பாக கலக்குவேன் நண்பா!

    ReplyDelete
  5. ஶ்ரீதர், இப்போதுதான் உங்கள் வலைத்தளத்தைப்பார்க்கிறேன். போட்டோஷாப் பற்றி முழுவதுமாய் எங்கு கற்றுக்கொள்வது என்று காத்திருந்த எனக்கு இது நிஜமான வரப்பிரசாதமே. நன்றி கலந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. Sairose தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி!தொடர்ந்து வாருங்கள்.நீங்களும் சாதிக்கலாம்.

    ReplyDelete
  7. super! very nice tutorials mr.sridhar
    thankyou very much
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ஸ்ரீதர் தெடருங்கள்

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்