Monday, August 1, 2011

போட்டோஷாப் பாடம் 31- EASY COMPOSITION MULTIPLY

வணக்கம் நண்பர்களே!
இன்று Easy Composition Multiply என்ற முறையை பற்றி பார்ப்போம்.இந்த முறை  மிக எளிமையானது மட்டும் இன்றி பார்க்க மிக அழகாக ஒரு professional photo touch
உடன் தலைமுடி பிசிறுகளை கூட எந்த சேதாரமும் இல்லாமல்  வெட்டி
எடுக்கக்கூடிய எளிமையான முறையாகும்.தேவையான படத்தையும்,background ஐயும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.    
                                                                                                                         
இப்போது படத்தை Background ன் மீது Copy, Paste செய்யவும்.

 இப்போது Layer 1 ன் Blending Mode ஐ Multiply க்கு மாற்றுங்கள்.
                                                                          
இப்போது Ctrl +J அழுத்தி Duplicate செய்து அதன் Blending Mode ஐ Normal க்கு மாற்றுங்கள்.

இப்போது படத்தில் இருக்கும் வெள்ளை பகுதியை அழித்துவிடுங்கள்.அழிக்கும்
போது தலைமுடி பிசிறுகள் அழிக்கப்பட்டால் கவலை வேண்டாம்.
இப்போது Layer 1 ஐ Layer 1 Copy க்கு மேலே வைத்து விடுங்கள்.இப்போது நமக்கு தேவையான படம் தயார்.இந்த முறை வெள்ளை background உள்ள படங்களுக்கு மிகவும் சிறந்தது.


என்ன நண்பர்களே!பதிவை பற்றிய கருத்தை கூறுங்கள்.

நண்பர்களே ஒவ்வொரு சிறிய விசயத்திற்கும் நான் Screen Shot வைப்பதற்கு காரணம் என் வலைப்பூவிற்கு வரும் வாசக நண்பர்கள் எவ்வித சிரமமும் இன்றி அனைத்து பாடங்களையும் சுலபமாக பயில வேண்டும் என்ற எண்ணத்தில்
தான்.ஏன் என்றால் நான் போட்டோஷாப் கற்றுக்கொண்ட ஆரம்பநாட்களில் அவ்வளவு சிரமப்பட்டேன். நான் பட்ட சிரமம் என் வாசக நண்பர்கள் படவேண்
 டாம்.
இந்த வலைத்தளம் ஆரம்பித்து ஒரு மாதத்தில் Followers  ஆன 36 அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

முக்கியமாக இந்த வலைபூவிற்கு 50 சதவிகித வாசகர் வருகைக்கு காரணம்
நண்பர் சுதந்திர மென்பொருள் ஷிர்டி சாய்தாசன் என்பதை கூற கடமைபட்டிருக்கிறேன்.எனது ஒவ்வொரு பதிவிற்கும் வந்து என்னை ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

இன்று ரமலான் நோன்பு ஆரம்பம்.எனதருமை இஸ்லாமிய சகோதர,  சகோதரிகளுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.இங்கு ரமலான்
காரணமாக எனக்கு சற்று வேலை பளு அதிகம். எனவே 15 தினங்களுக்கு பதிவுகள் போட முடியாது என்று நினைக்கிறேன்.முடிந்த அளவு முயற்சிக்கிறேன்.என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்.    
என்றும் நேசமுடன் 
ஸ்ரீதர்

11 comments:

  1. சூப்பர்...


    எளிதாக புரிகிறது..

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Please create a google page listing all your previous posts on a single page. I have done it. mdkhan has done it. wonderful results. it is easy for visitors to view previous lessons like this.

    ReplyDelete
  4. nalla padhivu nandri thiru sridhar avargale
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  5. very nice... i am really appreciate it.. thank you so much... and also we are expecting from you lot.

    ReplyDelete
  6. நண்பருக்கு...
    என்னுடைய போட்டோஷாப் கற்றுக்கொள்ளும் ஆவல் இங்கு நிறைவடையும் என்று நினைக்கிறேன்...இன்று தான் வந்தேன்...படித்தவரை எளிதாகவே உள்ளது... நன்றிகள் பல...

    ReplyDelete
  7. பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  8. தங்களின் அனைத்து பதிவுகளையும் படித்தாகி விட்டது அனைத்தும்
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    ReplyDelete
  9. அன்புள்ள ஸ்ரீதர் வணக்கம் அருமையான உங்கள் சேவைக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் வெளியிடும் ஒவ்வொரு தலைப்பிலும் வெளியிடப்படும் குறிப்பு படங்களை என்னால் பார்க்க இயலவில்லை. அதை சரி செய்தால் மிகவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி.

    இப்படிக்கு
    (குவைத்திலிருந்து)
    கும்பகோணம் தாஜுதீன்

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்