Sunday, August 7, 2011

போட்டோஷாப் பாடம் 36- SKIN OF ANIMALS

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் நாம் செய்ய முடியாத உத்திகளே இல்லை எனலாம்.அந்த
வகையில் கிட்டத்தட்ட அத்தனை மிருகங்களின் தோலையும் மிக தத்ரூபமாக
உருவாக்கி நமக்கு தேவையான இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.இன்று
சிறுத்தை புலியின் தோலை மிக எளிமையாக உருவாக்குவது எப்படி என்பதை
பார்ப்போம்.

500*300 அளவில் புதிய File உருவாக்கிக்கொள்ளவும்.இப்போது Background -  Black , Foreground -ffaf0.

இப்போது Filter > Render > Clouds சென்று Ok தரவும்.
இப்போது Filter > Sketch > Photocopy சென்று வரும் விண்டோவில் கீழே உள்ளது
போல் மதிப்பு தரவும்.
இப்போது Filter > Artistic > Smudge Stick சென்று வரும் விண்டோவில் கீழே உள்ளது
போல் மதிப்பு தரவும்.
இப்போது நமது படம் இது போல் இருக்கும்.
இப்போது Filter > Noise >Add noise சென்று வரும் விண்டோவில் கீழே உள்ளது போல் மதிப்பு தரவும்.
இப்போது படம் இது போல் இருக்கும்.
இப்போது Filter > Blur >Motion Blur சென்று வரும் விண்டோவில் கீழே உள்ளது போல் மதிப்பு தரவும்.
இப்போது படத்தை Sharpen Tool கொண்டு படத்த சற்று சரிபடுத்திகொள்வோம்.
Sharpen tool தேர்வு செய்து Brush: 500 px,  Mode: Normal,  Strength: 40% இது போல் செட்
செய்து கொள்ளவும்.இனி Sharpen tool ஐ படத்தின் மீது ஒரே பக்கமாக தேய்த்து
விடவும்.படம் இது போல் இருக்கும்.
இப்போது ஒரு முக்கியமான வேலை இருக்கிறது.கீழே உள்ளது போல் மொசு
மொசுப்பாக முடி உள்ள ஒரு படத்தை தேர்வு செய்து நமது படத்தின் மீது Copy,
Paste செய்து அதன் Blend Mode ஐ Multiply க்கு மாற்றிவிடவும்.

இப்போது முன்பு செய்தது போல் மீண்டும் ஒரு முறை Sharpen Tool ஆல் லேசாக
ஒரே பக்கமாக தேய்த்து விடவும்.இப்போது நமக்கு தேவையன படம் தயார்.

பதிவை பற்றி கருத்தை கூறுங்கள்.
என்றும் நேசமுடன்

10 comments:

  1. அருமையான பதிவு.
    தொடர்ந்து படித்து வருகிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Hi Sridhar, you are a magician with photoshop.

    Who is your guru in photoshop? He will be very happy with his sishya after seeing this post.

    ReplyDelete
  3. super padhivu thiru sridhar avargale
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  4. Dear Sridhar,
    This is the first time I saw your blog and very happy to note and very much impressed with the easiest lessons on PHOTOSHOP you have given to the learners in simple Tamil. Real nice job! Please keep it up is my sincere request.
    K S Krishnan @ Srirangam

    ReplyDelete
  5. நன்றி, ஐயா,

    ReplyDelete
  6. வணக்கம் நண்பரே... முதல் முறையாக தங்கள் தளத்திற்கு வருகிறேன், போட்டோ ஷாப்பில் விருப்பம் உள்ளதால் இனி தொடர்ந்து வருகிறேன்...முன்பைய பதிவுகளையும் பார்த்து கற்றுக்கொள்கிறேன்.. எளிமையாகவும் அருமையாகவும் சொல்லி தருகிறீர்கள்.. நன்றியுடன் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  7. unbelivable.sridhar you are great.please dont stop your post.
    Sherif

    ReplyDelete
  8. ஹாய் ஸ்ரீதர், உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக இருக்கின்றது. எனது வலைதளத்தில் உங்கள் தள லிங்க் போட்டு இருக்கிறேன். வந்து பார்க்கவும்.
    www.vadakaraithariq.blogspot.com

    ReplyDelete
  9. வருகை தந்து பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!உங்கள் தளத்தில் என் தளத்திற்கு Link கொடுத்தமைக்கு மிகவும் நன்றி தாரிக்.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்