Thursday, August 11, 2011

போட்டோஷாப் 37-அனிமேஷன் -3 மழை

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் ஏற்கனவே படங்களின் மீது மழை Effect வர வழைப்பது
எப்படி என்பதை பார்த்தோம்.இன்று Animation மூலம் மிக தத்ரூபமாக மழை பெய்யவைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான படத்தை திறந்து கொள்ளுங்கள்.

புதிய லேயர் உருவாக்கிக்கொண்டு அதை கருப்பு நிறத்தால் நிரப்பவும்.

இனி Filter > Noise > Add Noise சென்று கீழே உள்ளது போல் மதிப்பு தரவும்.

இனி Filter > Blur > Motion Blur சென்று கீழே உள்ளது போல் மதிப்பு தரவும்.

இனி Image > Adjustment > Level சென்று கீழே உள்ளது போல் மதிப்பு தரவும்.
இப்போது Ctrl + J அழுத்தி 4 முறை Duplicate செய்து கொள்ளுங்கள்.இப்போது
Background Layer அல்லாமல் 5 லேயர்கள் இருக்கவேண்டும்.இந்த 5 லேயர்களின்
Blend Mode ஐ Screen ஆகவும்,Opacity 50% ஆகவும் மாற்றிக்கொள்ளுங்கள்.

இப்போது windows > Animation Click செய்யுங்கள்.இப்போது தோன்றும் Animation
விண்டோவில் கீழே உள்ளது போல் 5 Frame உருவாக்கி கொள்ளவும்
இனி Frame 1 தேர்வு செய்து Layer pallete ல் கீழே உள்ளது போல் செட் செய்யவும்.
                                                                         
                                                                           Frame-2

                                                                             Frame-3
இதே போல் frame 4, மற்றும் 5 க்கு செட் செய்து Frame Dealy time 0 sec , Forever  வைத்து
ஏற்கனவே animation பாடங்களில் சேமித்தது போல் சேமித்து கொள்ளுங்கள்.

நண்பர்களே! இதில் சிறு தவறு நேர்ந்தாலும் அனிமேஷன் வராது.கவனமாக
பாருங்கள்.எதுவும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.உங்களுக்
காகத்தான் இந்த வலைத்தளம்.

Motion Blur வெவ்வேறு அளவுகளில் செட் செய்த படங்கள் கீழே


பதிவை பற்றிய கருத்தை கூறுங்கள்.
என்றும் நேசமுடன்

27 comments:

 1. நண்பரே வணக்கம் ,
  உங்கள் பாடங்கள் விலை மதிப்பற்றது .ஒரு சிறு ஆலோசனை .நீங்கள் ஒவ்வொரு பாடமும் வீடியோ வடிவிலும் தொடர்ந்தால் இன்னும் மிக எளிதாக புரியும் .ஆலோசிக்கவும் .(like fast stone screen shot & video capture software )
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 2. சூப்பர் அனிமேஷன் பாஸ்..!!

  ReplyDelete
 3. வாவ் சூப்பர் நண்பா

  ReplyDelete
 4. அருமை நண்பரே

  ReplyDelete
 5. super padhivu thiru sridhar avargale
  surendran
  surendranath1973@gmail.com

  ReplyDelete
 6. ஸ்ரீதர் நீங்கள் சொன்ன முறையில் செய்தால் Animate ஆகுதில்ல.. என்ன காரணம்|?

  ReplyDelete
 7. அணிமேசன் வரவில்லை காரணம் தெரியவில்லை நண்பரே

  ReplyDelete
 8. ஆஹா! ஆஹா! மழையைப் பார்க்க பார்க்க அலுக்காது. அதைப் போலவே தங்களின் கை வண்ணமும். குடத்துள் ஜொலிக்கும் குத்து விளக்கே விரைவில் குன்றேறி ஒளிர்க!

  அன்புடன், தஞ்சை துரைசெல்வராஜு - குவைத்.

  ReplyDelete
 9. animation palatte is missing in adobe photoshop 7. How can i open animation?
  Kindly explain me... thank you

  ReplyDelete
 10. ஸ்ரீதர் சார்!
  வீட்டுல சொல்லிச் சுத்திப் போடச் சொல்லுங்க!
  ரொம்ப சூப்பரா இருக்குதுங்க! நன்றிகள் பல!
  பாபு கோதண்டராமன்

  ReplyDelete
 11. தங்களின் அனைத்து பதிவுகளையும் படித்தாகி விட்டது அனைத்தும்
  அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  ReplyDelete
 12. அசத்தலாக இருக்கிறது...

  பயனுள்ள பகிர்வு....

  அன்பு வாழ்த்துகள் ஸ்ரீதர்...

  ReplyDelete
 13. wow what fantastic work bro ... carry on thank u very much

  ReplyDelete
 14. super. but animation not work. iam try other method blur distance diff each frame correct

  ReplyDelete
 15. super but animation not available 7.0

  ReplyDelete
 16. animation is not working. why??

  ReplyDelete
 17. அன்பின் ஸ்ரீதர் தங்களால் தரப்படும் இப்பாடங்கள் மிகப் பெறுமதி வாய்ந்தவை. எம்போன்றவர்களின் அறிவுத் தேடலை மிக எளிதாக பூர்த்தி செய்கின்றன. வாழத்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.
  திரு.மூ.சிவகுமாரன், அரசடித்தீவு வடக்கு, கொக்கட்டிச்சொலை.

  ReplyDelete
 18. நான் படங்களில் அனிமேஷன் எபஹ்ட் கொண்டுவர ஆசைப்படரேன்.கடந்த ஒருவருடமாக ப்ளாக் எழுதிவரேன். எனக்கு கொஞ்சம் விவரமா சொன்னாதான் புரிஞ்சுக்க முடியும் என் வயசு அப்படி மரங்களின் போட்டோ போட்டால் அதில் இலைகள் அசையும் படி, பூக்கள் இதழ் விரித்துமூடுவடுபோல் ம்கடவுள் படங்களிலும் அசைவுகள் என்று நிறைய தெரிந்து கொள்ள ஆவல் சொல்லி தருவீங்களா?

  ReplyDelete
 19. superb....very informative in Tamil...keep it up....

  ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்