Saturday, August 13, 2011

போட்டோஷாப்-38 ஐந்தே நிமிடத்தில் உங்கள் முகத்தை பொலிவூட்ட

வணக்கம் நண்பர்களே!
இன்று ஒரு சில நிமிடங்களில் பருக்களோ தழும்புகளோ இல்லாமல் நமது முகத்தை பொலிவுடன் விளங்கச்செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.இந்த முறையின் சிறப்பு என்னவெனில் நமது படத்திற்கு எந்தவிதமான சிறு சேதாரமும் ஏற்படாது என்பதே.

தேவையான படத்தை திறந்து கொள்ளுங்கள்.
Ctrl + J அழுத்தி DUPLICATE செய்து கொண்டு அதன் Blending Mode ஐ Vivid Light ஆக
மாற்றிக்கொள்ளுங்கள்.
இப்போது Crrl + i அழுத்தி invert செய்து கொண்டு filter > Blur > Gaussian Blur சென்று படத்தின் out line மட்டும் தெரியும் அள்வுக்கு செட் செய்து கொள்ளுங்கள்.நான்
இந்த படத்துக்கு 4.3 வைத்துள்ளேன்.
இப்போது Filter > Other > High pass சென்று  கீழே உள்ளது போல் மதிப்பு கொடுங்கள்.
இதில் நான் கொடுத்திருக்கும் மதிப்பு 52.4 என்பது இந்த படத்திற்காக நான் கொடுத்தது.உங்கள் படத்திற்கு உங்களுக்கு திருப்தியான அளவு மதிப்பிட்டுக்
கொள்ளுங்கள்.
இப்போது Layer Mask Click செய்து அதை கருப்பு நிறத்தால் நிரப்பவும்.

இப்போது Soft brush தேர்வு செய்து கண்களையும் ,உதடுகளையும் விட்டு விட்டு
முகம் முழுவதும் ஒரே சீராக Brush செய்யுங்கள்.Brush செய்து முடிந்ததும் Blending Mode ஐ Screen க்கு மாற்றி விடுங்கள்.
இப்போது படம் மிகவும் வெள்ளையாக இருந்தால் உங்களுக்கு திருப்தி ஏற்படும் வரை Opacity ஐ குறைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது நமது படம் நாமே வியக்கத்தக்க வகையில் மிகவும் பொலிவுடன்
காணப்படும்.

பதிவை பற்றி கருத்தை கூறுங்கள்.
என்றும் நேசமுடன்

24 comments:

  1. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஆஹா... போட்டோசாப்பில் மிகவும் பயனுள்ள பகுதியை பகிர்ந்துள்ளீர்கள்...நன்றி

    ReplyDelete
  3. //இப்போது Layer Mask Click செய்து அதை கருப்பு நிறத்தால் நிரப்பவும்.//

    இதுதான் எப்படி கருப்புநிறத்தால நிரப்புவது என்று தெரியவில்லை..

    ReplyDelete
  4. அருமையான பதிவு தல.. நன்றி
    Srisivam Selvarajan

    ReplyDelete
  5. சிம்பிளா சொல்லித் தருகிறீர்கள்
    நன்றி

    ReplyDelete
  6. நண்பரே வணக்கம் ,
    இப்போது Layer Mask Click செய்து அதை கருப்பு நிறத்தால் நிரப்பவும்

    எப்படி கருப்புநிறத்தால நிரப்புவது என்று தெரியவில்லை..

    நட்புடன்,
    கோவை சக்தி

    ReplyDelete
  7. @sakthiஎப்படி கருப்புநிறத்தால நிரப்புவது என்று தெரியவில்லை..
    layer mask click செய்து உங்கள் படத்தின் மீது edit > fill > black apply பண்ணலாம்.அல்லது paintbucket
    tool மூலம் black தேர்வு செய்தும் apply செய்யலாம்.
    நன்றி!

    ReplyDelete
  8. பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும்
    நன்றி!

    ReplyDelete
  9. மிகவும் பயனுள்ள பதிவு....பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  10. நண்பா உங்களின் பதிவு உண்ண உண்ண திகட்டாத பழா சுலையை போன்றது. சிறக்கட்டும் உங்கள் பணி. மென் மேழும் உங்கள் தளத்தில் அரிய பதிவுகள் இட வாழ்த்துகள்.

    வாழ்க தழிழ் !! வழர்க வையகம் !!!

    ReplyDelete
  11. நண்பா உம் பதிவு போட்டாசாப் 7 பொருந்துமா

    ReplyDelete
  12. தங்களின் அனைத்து பதிவுகளையும் படித்தாகி விட்டது அனைத்தும்
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    ReplyDelete
  13. தங்களின் அனைத்து பதிவுகளையும் படித்தாகி விட்டது அனைத்தும்
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    ReplyDelete
  14. மிகவும் அருமை தொடருங்கள்

    ReplyDelete
  15. அன்பின் நண்பருக்கு இனிய வணக்கம்,
    உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இன்றைய வலைச்சரப் பதிவில் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

    ReplyDelete
  16. ஆஹா மேஜிக் தான் இது....

    கண்டிப்பாக கற்று பயன் பெறும் பகிர்வு....

    அன்பு வாழ்த்துகள் ஸ்ரீதர்...

    ReplyDelete
  17. அன்பிற்க்கினிய சகோதரர் அவர்களே. உங்கள் சுற்றத்தார் அனைவர் மீதும்
    அல்லாஹ்வின் வற்றாத கருணை உண்டாவதாக உங்கள் வலை பதிவுகளை
    எனது வலைப்பூவின் வாசகர்கள் பயன்பெரும் வகையில் உங்கள் பதிவுகள்
    அனைத்தையும் ஆர்சிவ்ஸ்ஸா பதிவிட்டுள்ளேன் தயவு செய்து வாருங்கள்
    உங்கள் கருத்துரையை பதியுங்கள் இந்தியாவில் இருந்தால் கால் செய்யுங்கள்
    அன்புடன் ஓ.பி.கலில் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம் 9841306148.

    பி.கு. உங்கள் பதிவுகள் அனைத்திற்க்கும் பின்னூட்டமிடவே ஆசைபடுகிறேன்.
    சில வரம்புமீறிய சொர்களையும் வார்தைகளையும் புகழ்தள்களையும் கண்டு
    பயப்படுகிறேன்!...
    http://www.kaleelsms.com/2011/09/blog-post_9890.html

    ReplyDelete
  18. kalakkal sagothara pani menmelum sirakka vaithukkal

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்