Saturday, August 13, 2011

போட்டோஷாப் 39-பகல் பொழுதை பவுர்ணமி இரவாக்குவோம்.

வணக்கம் நண்பர்களே!
இன்று பகல் பொழுதில் எடுக்கப்பட்ட ஒரு படத்தை மனதை கொள்ளை  கொள்
ளும் அழகிய பவுர்ணமி இரவில் எடுக்கப்பட்ட படம் போல் மாற்றுவது எப்படி என்பதை மிக மிக எளிதாக பார்ப்போம்.
தேவையான படத்தை திறந்து கொள்ளுங்கள்.நீங்கள் தேர்வு செய்யும் படம் நீர்
நிலைகள் உள்ள படமாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

இப்போது புதிய லேயர் உருவாக்கி கொள்ளுங்கள்.நாம் நம் படத்தை பவுர்ணமி
இரவாக மாற்றப்போகிறோம் அல்லவா.அதனால் முழு நிலவாக உள்ள ஒரு படத்தை வேறு ஒரு படத்திலிருந்த்து வெட்டி எடுத்து கொள்ளுங்கள்.
நான் இந்த படத்தில் இருந்து வெட்டி எடுத்துள்ளேன்.வெட்டி எடுத்த நிலவை
உங்கள் புதிய லேயரின் மீது Paste செய்து கொள்ளுங்கள்.
இப்போது நிலாவின் Layer Mode ஐ Screen க்கு மாற்றவும்.
இப்போது Alt Key ஐ அழுத்திக்கொண்டு நிலாவை கீழே நீரின் மீது இழுத்து விடவும்.
இப்போது நீரின் மீது இருக்கும் நிலவின் Layer ஐ தேர்வு செய்து Edit > Transform
சென்று Rotate 180 Click செய்யுங்கள்.இப்போது மீண்டும் Edit > Transform சென்று
Flip Horizontal தேர்வு செய்யவும்.இந்த செட்டிங் செய்தால் நிலவின் பிரதிபலிப்பு
அசலாக இருக்கும்.உங்களுக்கு தேவையில்லை எனில் இந்த செட்டிங்கை விட்டு விடவும்.
இப்போது வானத்தில் இருக்கும் நிலவின் Opacity-60 ஆகவும், நீரில் இருக்கும்
நிலவின் Opacity-25 ஆகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது புதிய லேயர் உருவாக்கி அதை F1EF2B இந்த கலரால் நிரப்பி அதன்
Blend Mode ஐ Hue க்கு மாற்றுங்கள்.
இப்போது மீண்டும் புதிய லேயர் உருவாக்கி அதை C30D0D இந்த கலரால் நிரப்பி
அதன் Blend Modeஐ Overlay க்கு மாற்றி அதன் Opacity ஐ 50% ஆக மாற்றி விடுங்கள்.
இப்பொழுது மிக ரம்மியமான பவுர்ணமி நேர இரவுத்தோற்றம் நமக்கு கிடைத்து
விட்டது.
தேவை என்றால் Custom Shape Tool ல் இருந்து பறவை தேர்வு செய்து கீழே நான்
வைத்திருப்பதை போல் செட் செய்து கொள்ளுங்கள்
 பதிவை பற்றிய கருத்தை கூறுங்கள்.
                            என்றும் நேசமுடன்
                                                                                                                                                   

8 comments:

  1. ஹலோ ஸ்ரீதர்!
    Wow! அம்புட்டுத்தான் சார்! என்னா டக்கரா எக்ஸ்ப்ளெய்ன் செஞ்சிரிக்கீங்க தெரியுமா! தமிழ்லேயே அழகாக எழுதியிருக்கிறதுக்கு ரொம்ப தாங்க்ஸ்!

    அன்புடன்,
    =பாபு கோதண்டராமன்

    ReplyDelete
  2. very briliant post.no words of coment

    ReplyDelete
  3. nalla payanulla pathivu sir.

    kumaran
    k.s.a

    ReplyDelete
  4. வாவ் அற்புதம் நண்பரே... பகல் நிலவு. நன்றி

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
    நன்றி!

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்