Sunday, August 21, 2011

போட்டோஷாப் 43- WOODEN CARVINGS WORKS கற்றுக்கொள்ளுங்கள்.

வணக்கம் நண்பர்களே!
இன்று போட்டோஷாப்பில் wooden carving எனப்படும் மரத்தில் பூ வேலைப்பாடு
செய்வது எப்படி என்று பார்ப்போம்.இந்த Effect உருவாக்க நமக்கு இரண்டு வித
மான படங்கள் தேவை.dark கலரில் ஒரு Wood படமும் Light கலரில் ஒரு Wood
படமும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Dark கலர் Wood ன் மேல் Light கலர் wood ஐ Copy Paste செய்து கொள்ளுங்கள்.
நமது Light கலர் Wood ன் படம் சற்று Bright ஆக உள்ளது.அதனால் அதை சற்று
Dark ஆக ஆக்கி கொள்வோம்.அதற்கு Ctrl + U அழுத்தி வரும் விண்டோவில்  கீழே உள்ளது போல் மதிப்பு தரவும்.நண்பர்களே இந்த செட்டிங் மிகவும் அவசியமல்ல.தேவைபட்டால் செய்து கொள்ளலாம்.
             
சரி அடுத்த கட்டத்திற்கு போவோம்.இப்போது Custom Shape Tool தேர்வு செய்து
உங்களுக்கு விருப்பமான பூவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.நான் தேர்வு
செய்த படம் கீழே.
இப்போது Shape Selection Tool தேர்வு செய்து படத்தின் மீது வைத்து Right Click
செய்து வரும் விண்டோவில் Make Selection தேர்வு செய்யுங்கள்.

இப்போது Ctrl +Shift + J அழுத்துங்கள்.இப்போது நமது படம் மட்டும் வெட்டி எடுக்கப்பட்டு தனி லேயராக உருவாகி இருக்கும்.
இப்போது Layer 1 ஐ Hide செய்து விடுங்கள்.அதற்கு Eye Icon ஐ Click செய்யவும். இப்போது  நமது படம் கீழே உள்ளது போல இருக்கும்.
இப்போது Layer 2 ன் Blending Option ஐ கீழே உள்ளது போல் மாற்றுங்கள்.
    DROP SHADOW    
                                                                  

INNER GLOW     


BEVEL  & EMBOSS

இப்போது நமது படம் கீழே உள்ளது போல் இருக்கும்.
இப்போது Select > Load Selection Click செய்யவும்.இப்போது மீண்டும் Select >
Modify >


இப்போது புதிய Layer உருவாக்கி அதை Layer 2 ன் கீழே வைத்து வெள்ளை
நிறத்தால் நிரப்பவும்.( Edit > Fill > White ).

இப்போது Ctrl + D அழுத்தி Deselect செய்து கொண்டு Layer Mode ஐ OverLay க்கு 
மாற்றுங்கள்.
இப்போது Blending Option ஐ கீழே உள்ளது போல் செட் செய்யுங்கள்.
INNER GLOW

BEVEL & EMBOSS

நண்பர்களே. நமது வேலை முடிந்தது  நமக்கு தேவையான அழகான Wooden
Carvings Effect தயார்.பதிவை பற்றிய கருத்தை கூறுங்கள்.

நமது தளத்தை பின் தொடரும் அனைத்து Follower களுக்கும் சென்ற பாடத்தின்
kaleidoscope Plugins அனுப்பி இருந்தேன்.கிடைத்ததா?தோழி ஜான்சி மட்டுமே 
கிடைத்ததாக மின்னஞ்சல் செய்திருந்தார்.
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்

29 comments:

 1. இயற்கையாக மரவேலைப்பாடு செய்ததுபோல் உள்ளது.plug-in கிடைத்தது.மின்னஞ்சல் அனுப்பாததற்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 2. மிக அருமையான மர வேலைப்பாடு.. நன்றி ஸ்ரீதர் பகிர்வுக்கு:)

  ReplyDelete
 3. உங்கள் தலத்தில் தரவிறக்கம் செய்த இரண்டு plug-ing சப்போர்ட் செய்யவில்லை என உங்களிடம் கேட்டிருந்தேன் தயவு செய்து எனது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.kk38274@gmail.com

  kumaran

  ReplyDelete
 4. நாங்க எல்லோரும் plug-in கேட்டோம் நீங்க சேலம் தேவாவுக்கு மட்டும் அனுப்பியிருக்க்ரீர்கள் இது ஒரு நியாயமில்லாத வேலை எனவே பதிவு மிக பயனுள்ள பதிவு மென்மேலும் உங்களிடம் நிறைய படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.
  நன்றி....
  நேசமுடன்
  மபாஸ்.

  ReplyDelete
 5. அருமையான பதிவு. நீங்கள் அனுப்பிய பிளக் இன் கிடைத்து.
  மரம் கிடைக்காத ஊரிலும் wood carving செய்யலாம்.

  ReplyDelete
 6. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. எப்பிடீங்க இதெல்லாம்?

  நீங்க ரொம்ப நல்லவருங்க!

  -பாபு கோதண்டராமன்
  https://kaalaiyumkaradiyum.wordpress.com
  தமிழில் டெக்னிக்கல் அனாலிசஸ்

  ReplyDelete
 8. migaa azhagavum arumayagavum ulladhu
  thiru sridhar avargale
  nandri
  surendran
  surendranath1973@gmail.com

  ReplyDelete
 9. I need one help from you.... i want to create some logo designs,

  so can you please guide me to create some logos in Photoshop or please post some tutorials regarding logo designing in photoshop

  Thanks in Advance

  ReplyDelete
 10. மிக அருமையான மர வேலைப்பாடு அருமையான பதிவு publish as a book வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. சிற்பி போல் தாங்கள் செதுக்கிய மர வேலைப்பாடு அற்புதமாக, அழகாக உள்ளது.எனக்கும் *ப்ளக் இன்* வேண்டும்,நன்றி..

  ReplyDelete
 12. மிக்க நன்றி சகோதரா...

  மீண்டும் தங்கள் பதிவகளை ஒரு முறை முழுமையாக படித்து விட்டு வருகிறேன்... இது கட்டாயம் எனக்குப் பிரயோசனமான தளமாகும்.

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  அன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்

  ReplyDelete
 13. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. itha ! itha ! ithathaan ethirparthean.
  Thank you so much.

  ReplyDelete
 15. அருமையான பதிவு சகோ

  நேரம் கிடைக்கும் போது ஆரம்பத்திலுருந்து வந்து கத்துக்குறேன்

  வாழ்த்துக்கள்
  மேலும் பல பயனுள்ள குறிப்புகள் படைத்திட........

  ReplyDelete
 16. பாலோவர்ஸ் கெட்ஜெட் எங்கே இருக்கு?

  ReplyDelete
 17. மொதல்ல தெரியல.... ரிப்ரஸ் பண்ணதுக்கு பிறகு தெரியுது :-)

  ReplyDelete
 18. மிக அருமையான வேலைப்பாடு.. நன்றி ஸ்ரீதர்...
  முதல்ல இருந்து ஆரம்பிக்கணும் போல...

  ReplyDelete
 19. அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. pls give me a kalaidas scop plug in my email ad
  abiramachandran@gmail.com

  ReplyDelete
 21. எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள் நண்பா.

  ReplyDelete
 22. நல்ல விளக்கம் நன்றி

  ReplyDelete
 23. என் தளத்திற்கு வருகை தந்து கருத்துக்களையும்,வழ்த்துக்களையும் கூறி என்னை உற்சாகப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 24. very interesting part.

  thank you.

  ReplyDelete
 25. nice to learn.... thanks for sharing...

  please read my blog www.rishvan.com and join as follower of my blog.

  ReplyDelete
 26. Please sent pluging Im from Srilanka

  ReplyDelete
 27. Please sent pluging Im from Srilanka

  ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்