Friday, August 26, 2011

போட்டோஷாப் 44- HALFTONE BORDER போடுவது எப்படி.

வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப்பில் இன்று Colorfull Halftone போடுவது எப்படி என்று 
பார்ப்போம்.தேவையான படத்தை திறந்து கொள்ளுங்கள்.புதிய லேயர்
உருவாக்கி அதை வெள்ளை நிறத்தால் நிரப்பவும்.( Edit > Fill > White)இப்போது Rectangular Marquee Tool தேர்வு செய்து படத்தை சுற்றி ஒரு கட்டம் 
போடுங்கள்.
இப்போது கட்டத்தை கறுப்பு நிறத்தால் நிரப்பவும்.(Edit > Fill > Black ).
இப்போது Ctrl + D அழுத்தி Deselect செய்து கொண்டு filter > Convert Smart Filters Ok
செய்யவும்.

இப்போது Filter > Blur > Gaussian Blur சென்று வரும் விண்டோவில் radius ன்
மதிப்பு 5.0 px தரவும்.இப்போது Filter > Pixelate > Color Halftone சென்று வரும்
விண்டோவில் கீழே உள்ளது போல் மதிப்பு தரவும்.
இப்போது Layer 1 ன் Blend mode ஐ Screen க்கு மற்றிவிடுங்கள்.அவ்வளவு தான்
நமக்கு தேவையான effect தயார்.
இதையே நாம் வெள்ளை நிறத்தை நிரப்பியதற்கு பதில் கலர் நிரப்பி வந்த
படம் கீழே.இதற்கு Radius ன் மதிப்பு 10 கொடுத்துள்ளேன்.


 இதையே Pattern fill செய்த படம் கீழே.
Gradient fill செய்த படம்
custom shape tool மூலம் டிசைன் செய்தது.
பதிவை பற்றிய கருத்தை கூறுங்கள்.
வாசக நண்பர்களே! நீங்கள் இடும் பின்னூட்டங்களுக்கு பதில் பின்னூட்டம்
இடவில்லை என்று என்னை தவறாக நினைக்க வேண்டாம்.இங்கு ரமலான்
மாதமாதலால் வேலைபளு சற்று அதிகமாக உள்ளது.அதனால் தான் பின்னூட்
டங்களுக்கு பதில் பின்னூட்டமிட முடியவில்லை.மன்னிக்கவும்.
என்றும் நேசமுடன் 

22 comments:

 1. வணக்கம் நண்பரே..halftone border போடுவதைப்பற்றி அறிந்துக்கொண்டென்...மிக எளிமையாக பட விளக்கத்துடன் போட்டோசாப் பதிவு.. மிகவும் பயனுள்ளது...பிராக்டிஸ் செய்து பார்க்கவேண்டும்.. பகிர்வுக்கு நன்றி நண்பரே...

  ReplyDelete
 2. nalla padhivu thiru sridhar avargale
  surendran
  surendranath1973@gmail.com

  ReplyDelete
 3. nalla padhivu thiru sridhar avargale
  surendran
  surendranath1973@gmail.com

  ReplyDelete
 4. Even if earlier indli votes are not showing why you did not submit this post to indli?

  ReplyDelete
 5. அன்பின் நண்பருக்கு இனிய வணக்கம்,
  உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இன்றைய வலைச்சரப் பதிவில் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

  ReplyDelete
 6. கலர்புல் பார்டர்கள் கற்பித்தமைக்கு நன்றி..!! திரட்டிகளில் இணைக்க வில்லையா..?!

  ReplyDelete
 7. *Half tone border*
  செயல் விளக்கம் மிக எளிமையாக சிறப்பாக உள்ளது நன்றி....

  ReplyDelete
 8. மிக அருமையான பயனுள்ள பகிர்வு ஸ்ரீதர்.....

  நானும் கற்றுக்கொள்ள முயல்கிறேன்....

  எளிமையாக எல்லோருமே புரிந்துக்கொள்ளும் வகையில் விவரித்த விதம் மிக அருமை....

  அக்கவுண்ட்ஸ் சொல்லித்தரும் யாரேனும் ட்யூட்டர் இருந்தால் எனக்கு தெரிவிப்பீர்களா ப்ளீஸ் ஸ்ரீதர்...

  அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....

  ReplyDelete
 9. Thanks lot Sri...U done a good job.

  ReplyDelete
 10. ரெவெரிSaturday, August 27, 2011

  அருமை...ரெவெரி

  ReplyDelete
 11. பயனுள்ள நல்ல தகவல் அருமையான விளக்கத்துடன் நன்றி சகோ பகிர்வுக்கு .சந்தர்பம் கிடைத்தால் என் ஆக்கங்களைக் கண்டு களியுங்கள் .

  ReplyDelete
 12. போட்டோ எடுக்கவே எனக்குத் தெரியாது
  நண்பரே!மன்னிக்க!

  வலை கண்டுவந்தீர் கருத்துரைத்
  தந்தீர் நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 13. இப்போது Ctrl + D அழுத்தி Deselect செய்து கொண்டு filter > Convert Smart Filters Ok
  செய்யவும்.//
  இந்த வசதி என்னுடைய போட்டோஷாப் 7ல் இல்லை, நீங்கள் எந்த வெர்ஷன் உபயோகிக்கிறீர்கள் என்று கூறவும்...

  மேலும் தாங்கள் ரைட் க்ளிக் வசதியை முடக்கி உள்ளீர்கள் சில உலவிகளில் நீங்கள் ரைட் க்ளிக் டிஸேபிள் செய்யப்பட்டிருந்தாலும் அதிலுள்ள இடுகைகளை காப்பி செய்யமுடியும், நான் மேலே போட்டுள்ளது காப்பி செய்துதான். எனவே உங்கள் பதிவுகளை பாதுகாக்க படங்களின் மீது வாட்டர்மார்க் ஆட் செய்யவும், இன்னும் சில பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ளவும், உங்கள் உழைப்பை பலர் திருடலாம், இடுகை திருடன் என்ற ஸ்கைப் பெயர் வைத்துள்ள ஒருவன் நம் தமிழ் தொழில்நுட்ப பதிவர்களின் இடுகைகளை மட்டும் குறிவைத்து திருடுகிறான் எனவே கவனம் தேவை, ஏற்கனவெ எனது இரண்டு இடுகைகளை திருடிவிட்டான்

  ReplyDelete
 14. very nice post!

  ReplyDelete
 15. மாணவன் said...

  அன்பின் நண்பருக்கு இனிய வணக்கம்,
  உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இன்றைய வலைச்சரப் பதிவில் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

  எனது தளத்தை வலைசரத்தில் அறிமுகப்படுத்திய அண்ணன் திரு, வைகை அவர்களுக்கும்,தகவலை தளத்திற்கு வந்து எடுத்துரைத்த நண்பர் மாணவன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 16. Heart Rider said...

  இப்போது Ctrl + D அழுத்தி Deselect செய்து கொண்டு filter > Convert Smart Filters Ok
  செய்யவும்.//
  இந்த வசதி என்னுடைய போட்டோஷாப் 7ல் இல்லை, நீங்கள் எந்த வெர்ஷன் உபயோகிக்கிறீர்கள் என்று கூறவும்...

  நண்பரே! எதையும் deselect செய்வதற்கு போட்டோஷாப்பில் Select > deselect click செய்ய வேண்டும்.அதற்கான Short Cut key
  தான் ctrl + d.அதனால் எந்த பாடத்திலும் short cut key கொடுத்திருந்தால் அதை அழுத்துங்கள்.மற்ற விசயங்கள் தானாக நடந்து விடும்.மற்றபடி பதிவு திருடர்களின் கொட்டத்தை வாசக நண்பர்கள் நினத்தால் அடக்கிவிட முடியும்.அவர்கள் தளத்தை புறக்கணிப்பதன் மூலம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!

  ReplyDelete
 17. என் தளத்திற்கு வந்து கருத்திட்ட
  மாய உலகம்
  surendranath
  மென்பொருள் பிரபு
  சேலம் தேவா
  somasundaram gunasekaran
  மஞ்சுபாஷிணி
  nanban gopi
  அம்பாளடியாள்
  Rajesh
  புலவர் சா இராமாநுசம்
  Heart Rider
  மாணவன் ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 18. filter > Convert Smart Filters Ok
  செய்யவும்.// எனக்கு இந்த ஸ்மார்ட் ஃபில்டர்ஸ் வசதி இல்லை என்று குறிப்பிட்டேன்...

  ReplyDelete
 19. thank a lot Mr.sridhar

  ReplyDelete
 20. The strength of these will depend on how fast you want to target
  a pure body and system, then performing a body colon cleanse diet is the answer.
  One key factor is to be applied at the sole of the foot.


  Also visit my homepage - homepage

  ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்