Wednesday, August 10, 2011

நன்றியுரை- இது போட்டோஷாப் பதிவு அல்ல.

வணக்கம் நண்பர்களே!
இந்த வலைப்பூ ஆரம்பித்து 40 நாட்களில் இவ்வளவு பெரிய வரவேற்பு கொடு
த்த வாசக சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் பணிவான நன்றி கலந்த வணக்கம்.இதற்கு காரணம் எனது பதிவுகள் என்று நான் நினைத்தால் என்னை விட கர்வம் பிடித்தவர்கள் யாரும் இருக்க முடியாது.பின் இந்த வலைப்பூவின்
வெற்றிக்கு காரணம் யார்?


என்னையும் ,என் எழுத்துக்களையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததில்
முக்கிய பங்கு சுதந்திர மென்பொருள் பிரபு அவர்களையே சேரும் என்று
சொன்னால் அது மிகையல்ல.ஒரு வலைத்தளம் நடத்துபவர் அவரது வலைத்   தளத்தில் மற்ற சக வலைபதிவரின் புகைபடத்தை போட்டு அவரையும் ,அவரது
எழுத்துக்களையும் அறிமுகப்படுத்தவும்,பெருமையாக பேசவும் மிகப்பெரிய
மனது வேண்டும்.அத்தகைய பெரிய மனதுக்கு சொந்த்தகாரர் மென்பொருள்
பிரபு அவர்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது.தொழில்
நுட்ப பதிவுலகில் எத்தனையோ ஜாம்பாவான்கள் இருக்கும் போது நமது
வலைத்தளத்திற்கு 22 வது இடம் கிடைத்ததற்கு வாசகர்களாகிய நீங்களும்
காரணம் என்றாலும் எனது பதிவுகள்  உங்களை எளிதில் வந்து சேரக் காரண மான மென்பொருள் பிரபு அவர்களே இந்த வெற்றிக்கு சொந்த்தக்காரர் என்று
கூறிக்கொள்வதில் மிகவும் பெருமை அடைகிறேன்.புதிதாய் வலைத்தளம்
ஆரம்பிக்கும் நண்பர்களே! உங்கள் தளம் பிரபலமடைய வேண்டுமெனில் மென் பொருள் பிரபுவிடம் செல்லுங்கள்.உங்கள் தளம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவரே உங்களை தேடி வருவார்.இந்த நேரத்தில் நான் நன்றி
சொல்ல கடமைபட்ட மற்றும் சிலர்
                            எனதருமை வாசக சகோதர,சகோதரிகள்
                            என்தளத்தை பின் தொடரும் 55 அன்பு உள்ளங்கள்,
                            மின்னஞ்சல் மூலம் தொடரும் 105 நண்பர்கள்,
                            எனது ஒவ்வொரு பதிவையும் என்னுடன் இருந்து என்னை ஊக்கப்படுத்தும் சக ஊழியர் அண்ணன் செல்வராஜ்( தஞ்சை)அவர்கள்,
                            என் வலைபூவை வடிவமைக்க ஏதாவது ஒரு வகையில்
காரண்மாக இருந்த (இருக்கும்) தமிழ் கம்ப்யூட்டர்,வந்தேமாதரம்,  தொழில் நுட்பம் (TVS 50) ஆகிய மூன்று சகோதர வலைபதிவர்கள்,
                           தமிழ் மனம்,இண்ட்லி,தமிழ்வெளி,திரட்டி,உலவு,போன்ற வலை
திரட்டிகள்,
                            எனது அனைத்து பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டு என்னை
ஊக்கப்படுத்தும் சகோதரர்கள், ஆகிய அனைவருக்கும் நான் என்றென்றும்
நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
                             முக்கியமான ஒருவரை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
ஒரு பின்னூட்டதில் மென்பொருள் பிரபு உங்கள் குரு யார்?அவர் உங்களை
சிஷ்யானாக அடைய பெருமைபட்டிருப்பார் என்று கேட்டிருந்தார்.ஒரு முறை
நான் போட்டோஷாப் கற்றுக்கொடுங்கள் என்று ஒருவரிடம் கேட்டேன்.
ஆனால் அந்த பெரிய மனிதர் உனக்கெல்லாம் போட்டோஷாப் வேண்டுமா
போய் கம்ப்யூட்டரையெல்லாம் துடைத்து வை என்று கூறிவிட்டு என்பின்னே
தகாத வார்த்தைகளால் பேசினார்.அந்த பெரிய மனிதர் அன்று கூறிய வார்த்
தைகளே இன்று போட்டோஷாப்பில் எனது வளர்ச்சிக்கு காரணம்.எனக்கு
தெரிந்தது இனி உங்களுக்கும் என்ற வாசகத்திற்கு காரணமும் அவர்தான்.
அன்று அவரால் நான் பட்ட வேதனை வேகமாக மாறி வெறியுடன் நான் போட்டோஷாப்பை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய வித்திட்டது. உலகி லேயே கொடுக்க கொடுக்க குறையாத செல்வம் கல்விச்செல்வம் மட்டுமே.
நமக்கு தெரிந்ததை மற்றவர்களூக்கும் கற்றுக்கொடுப்போம்.

  (அண்ணன் விசு என்னும் விஸ்வநாதன் அவர்களே! என்றாவது ஒரு நாள் எனது வலைபதிவை படிக்க நேரிடலாம்.எனது இந்த பதிவு உங்கள் மனதை
காயப்படுத்துமாயின் மன்னித்து விடுங்கள்.)
என்றும் நேசமுடன்   

17 comments:

 1. வாழ்த்துக்கள் அன்பு சகோதரரே!... மிகக் குறுகிய காலத்தினுள்
  தங்களுக்குக் கிடைத்த வெற்றியையும் அதற்குக் காரணமானவர்களையும்
  மனந்துறந்து கூறும்போது தங்களது இதயத்தின் தூய்மை வெளிப்படுகின்றது .
  அத்தோடு,என்றோ ஓர்நாள் மனதில் ஏற்ப்பட்ட வலியின் விளைவாக நீங்கள்
  கற்ரவித்தை என்பது சாதாரணமான விடயம் அல்ல.வலிதரும் வெற்றியானது
  வாழ்வில் நாம் நினைத்துப்பார்க்க முடியாத பலராலும் அதிகம் பாராட்டுக்குரிய
  வெற்றியாகவே அமையும்.உங்கள் வாழ்நாளில் மென்மேலும் இந்த முயற்சியினால்
  அரிய பல சிறந்த வெற்றிகள் வந்து சேர எனது மனமார்ந்த பாராட்டுக்களும்
  வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். நன்றி பகிர்வுக்கு......

  ReplyDelete
 2. முதல் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்!

  பட்டையை கிளப்புங்க...

  -அன்புடன் பல்லவன்

  ReplyDelete
 3. வாழ்த்துகள். உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளன. மென்மேலும் நல்ல பதிவுகளைத் தந்து முன்னேற வாழ்த்துகள்

  ReplyDelete
 4. உங்களது போட்டோசாப் ரசிகர்களில் நானும் ஒருவனாகி விட்டேன்... வாழ்த்துக்களுடன் நன்றி

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் நண்பரே,
  தொடருங்கள் தொடர்கிறோம் ,
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 6. அறிவால் வென்று விட்டீர்கள்..!! மேலும் வளர வாழ்த்துகள்..!!

  ReplyDelete
 7. தங்களது விடாமுயற்சியை தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல் பகிர்ந்தளித்தமை குன்றிலிட்ட விளக்காய் மாற்றியது உம்மை. போட்டோஷாப் படிக்கக எனக்கு உதவியது சித்திரம்பேசுதடி. மேலும் தொடரட்டும் உமது பணி.

  ReplyDelete
 8. சதீஷ் குமார்Thursday, August 11, 2011

  வாழ்த்துகள்..!! நண்பரே தொடரட்டும் தக்களது பணி

  ReplyDelete
 9. //உங்கள் தளம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவரே உங்களை தேடி வருவார்//

  சரிதான். நன்றி

  ReplyDelete
 10. என்ன ஒரு அமைதியான குணம் தங்களுக்கு .

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் சகோதரரே. உங்கள் வலைப்திவுகளால் தமிழின சகோதரம் அதிக பயன் பெறும் என்பது திண்ணம். வாழ்க வளமுடன், நலமுடன்

  சிவம்

  ReplyDelete
 12. வணக்கம் ஸ்ரீதர். தங்களின் தாரக மந்திரமான தன்னம்பிக்கைக்கு முன் சிறு அணிலின் பணியைப் போன்றது எமது உற்சாக விமர்சனங்கள். வாழ்க வளமுடன்!

  அன்புடன், தஞ்சைதுரைசெல்வராஜு - குவைத்.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் ஸ்ரீதர். ஃபோடோஷாப் ல் படங்கள் செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆசை ஆனால் ஏனோ அதற்க்கு பொறுமை இருப்பதில்லை. இதுக்கு கொஞ்சம் க்ரியேட்டிவிட்டியும் வேண்டும் :-) அது என்னிடம் குறைவு.

  ReplyDelete
 14. ஓ.. நீங்கள் காயம்பட்ட புலியா? காயத்தையே அதை ஆற்றும் மருந்தாக மாற்றிவிட்டீர்கள்..!! பலே..! பலே..!! நீங்கள் உண்மையான திறமைசாலிதான்..!! வெற்றி தொடர வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
 15. எனக்கு தெரிந்து தங்களை போல (சுயமாக )ஆர்வமாக கற்று கொண்டவர்களே மற்றவர்களுக்கும் கற்பிக்கும் மனோபாவம் இருக்கும். தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள்.
  (kalakumaran - http://eniyavaikooral.blogspot.com/)

  ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்