Monday, August 15, 2011

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்...


தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

சகோதர சகோதரிகளுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

இன்று 65 வது ஆண்டு சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைக்கிறோம்.இத்தனை
ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் நாம் சுதந்திரமாக இருக்கிறோமா? விதண்
டாவாதத்திற்கு வேண்டுமானால் நம் சுதந்திரத்திற்கு என்ன குறை என்று கேட்
களாம்.ஆனால் மனசாட்சி உள்ளவர்கள் உங்கள் நெஞ்சில் கை வைத்து கேட்டு
பாருங்கள்.அரசியல்வாதிகள் அனுபவிக்கும் சுதந்திரத்தை அடித்தட்டு பாமரன்
அனுபவிக்கிறானா?அனைத்து வளங்களும் நம் அன்னை பூமி கொண்டிருந்தா
லும் அன்னியரிடம் கையேந்தும் நிலைஏன்? இதற்கு காரணம் யார்?அடுத்தவர்
ளை குறை கூறி பயனில்லை.நாமே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள
வேண்டும்.
 இனி வரும் காலங்களில்
முடியாது என்ற வார்த்தையை தூக்கி எறிவோம்.சிந்திக்க தெரிந்த நம்மால்
எதையும் சாதிக்கமுடியும்.முன்னுக்கு வர முடியவில்லையே என்று மூலை யில் முடங்கிக்கொண்டு ஒப்பாரி வைக்காமல் நியாயத்திற்கு ஓங்கி குரல் கொடுப்போம்.நம் குரல் இனிமையுடன் வலிமையையும் சேர்த்துக்கொள்    வோம். நமது திறமை வெளிச்சத்துக்கு வரும்.சாதிக்க முயலும் நமக்கு சாதி சங்கங்கள் எதற்கு.

நமது முயற்சியை தீவிரத்துடன் காட்டுவோம்! ஆனால் தீவிரவாதம் வேண் டாம் நமக்கு.தீவிரவாதம் தான் வழி என்றால் புத்தனும்,காந்தியும் ஏன் பிறந்தார்கள்.அகிம்சையால் அவர்கள் சாதிக்காத எதை நாம் தீவிரவாதத்தால் சாதிக்கப்போகிறோம்.நம் நாடு இளைஞர்களை என்றுமே இழந்து விட நினைப்பதில்லை, தீவிரவாதியாய் இருந்தாலும் திருந்திவிடுவான் என்ற நம்பிக்கையில்.
நமது ஒவ்வொரு செயலும் இந்தியத்தாயின் எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டுமே தவிற எதிர்ப்புடன் இருக்கவேண்டாம்.சாக்கடை ஓடும் இடத்தில் கூட நாம் கூட்டத்தை கூட்டுவோம்.சாக்கடையும் சுத்தமாகும்,நம் சிந்தனையும் வெற்றியாகும்.
அரசியல்வாதிகள் கூட்டும் வீண் கூட்டங்களில் நாம் தலையை காட்ட வேண்டாம்.அவர்களுக்கு நம் நிலையை காட்டுவோம்.பிரச்சினைக்குரியவர் எவர் பின்பும் நாம் செல்லாமல் அவர்களுக்கு முன் சென்று அவர்களின் முயற்சியை முறியடிப்போம். 

பிறர் பெயரை எழுத கற்றுக்கொண்ட நாம்,நம் பெயரை பிறர் எழுத கற்றுக்கொடுப்போம்.இதுவே நாம் ஏந்தும் முதல் ஆயுதம்.இது குறிவைத்த இடத்தயும் தாக்கும்,குறி வைக்காத இடத்தையும் தாக்கும்.எழுது கோலினால் இலக்கியம் மட்டுமல்ல, இதிகாசம் மட்டுமல்ல, இந்தியாவின் சரித்திரத்தையே மாற்ற முடியும்.

 நம் இந்தியத்தாயின் பெயரை களங்கடிக்கும் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கப்புறப்படுவோம்.நம் முயற்சி முறியடிக்கப்படும் போது முகம் சுளிக்க வேண்டாம்.முன்னோக்கி செல்வோம்,நம்மை தடுப்பவர்களின் அராஜகத்தை தகர்ப்போம்.புறப்படுங்கள் இளைஞர்களே!  இனி மேலாவது மானுடத்தை நம்புவோம்!மனிதத்தை மதிப்போம்!மனிதநேயம் கொள்வோம்!அன்பு என்னும் ஜோதி அணையாமல் காப்போம்!
இனி வரும் காலங்களிலாவது தேசப்பிதா கனவு கண்ட உண்மை சுதந்திரத்தை
அடைய கைகோர்ப்போம் இளைஞர்களே!
                                                                                                
இந்த நன்னாளில் இந்தியத்தாய்க்கு புத்துயிர் கொடுக்கப் புறப்படும் இளைஞர்
பட்டாளங்கள் சார்பாக தேசத்தாய்க்கு எங்கள் வீரவணக்கம். 
வாழ்க பாரதம்!                                                                                                        வளர்க தமிழ் !
                                                                      ஜெய்ஹிந்த்! 
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்

7 comments:

 1. மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com

  ReplyDelete
 2. அன்பு எனும் ஜோதி அணையாமல் காப்போம்...ஜெய்ஹிந்த்!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் நண்பரே ,
  நாம் எல்லோரும் ஓர் தாய் மக்கள் என்பதில் கர்வம் கொள்வோம் .ஊழலை ஒழிப்போம் !

  தேசப்பற்றுடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 4. வாழிய செந்தமிழ்! வாழிய நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு! வந்தேமாதரம்! வந்தேமாதரம்! அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

  அன்புடன், துரைசெல்வராஜு - தஞ்சை - குவைத்.

  ReplyDelete
 5. உங்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் என்னுடைய இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

  பட்டொளி வீசி பறக்கிறது உங்கள் தேசியகொடி. இதை
  போல் நாங்களும் செய்ய இயலுமா?...

  அட...டில்ல...டாங்கு...டாங்கு அதை கேட்டு வாங்கு...

  -அன்புடன் பல்லவன்

  ReplyDelete
 6. தங்களின் அனைத்து பதிவுகளையும் படித்தாகி விட்டது அனைத்தும்
  அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  ReplyDelete

உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்க சார்